Saturday, June 15, 2019

கொள்ளை அரசியல் - பதினோராம் நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள் - II



புதிய சொல்' இதழ் 07 இல் வெளிவந்த GEORGE W. SPENCER இன்'கொள்ளை அரசியல் - பதினொராம் நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள்' என்ற கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பின் இரண்டாவதும் இறுதியுமான பகுதி


தமிழில் : தேவா


கூலிப்படையும் பெருவணிகரும்
இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் சற்று நிதானித்து இன்னுமொரு காரணியைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். கொள்ளைமீதான பெருவிருப்பையும் தாண்டி, இதுவும் சோழரின் இலங்கையிலான நிலை கொள்ளலையும் குறுகியகால தென்னாசியக் காலுன்றலையும் விளங்கிக்கொள்ளக் உதவியாக  இருக்கும். இலங்கை, சீனாவிலிருந்து அரேபியாவரையான வில்போன்ற பரந்த பிரதேசத்தில் நடந்த வர்த்தகத்தில், ஒரு முக்கிய பாத்திரத்தினைப் பலநூற்றாண்டுகளாக வகித்து வந்திருக்கின்றது, இது, கடல்வழி வாணிபத்தைத் தங்களது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சோழர்கள் ஆர்வம் காட்டியதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்ற ஒரு ஊக அடிப்படையிலான ஒருகருதுகோள் உண்டு.31 வாணிபம் தொடர்பான இந்தக் கருதுகோளை ஏற்றுக்கொள்வதிலுள்ள சிக்கல் என்னவென்றால்  சோழஅரசு எந்தக்காலத்திலும் உள்நாட்டு மற்றும் கடல்கடந்த வணிகத்தில் நேரடியாக ஈடுபட்தற்கான எந்த சான்றாதாரமும் இல்லை என்பதுதான். இந்த வாணிபம் என்பது வெறுமனே சிறியளவில் செய்யப்பட்ட ஒரு வர்த்தக நடவடிக்கை அல்ல. மாறாக பெருமளவுக்கு, நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட வணிகர்களதும் கைவினைஞர்களினதும் கூட்டு முயற்சியாகவே இது இருந்தது. உண்மையில், வணிகத்தின் மீதான அரச ஏகபோகம்  தொடர்பான இந்தக் கருதுகோள், அரசனுக்கும் பெருவியாரிகளுக்கும் இடையில் நிலவிய உறவு பற்றிப் பல சிக்கலான கேள்விகளை-அதாவது, இந்தியா தனது வெளிநாட்டு வணிகத்திற்காக கொண்டிருந்த கட்டமைப்புகள் தொடர்பான கேள்விகளை எழுப்புகின்றது. ஆயினும், இந்த வாணிப மேலாதிக்க கருதுகோளை முன்வைத்தவர்கள் இவற்றை  எடுத்தாரயவில்லை. எவ்வாறாயினும், உள்நாட்டு வெளிநாட்டு வாணிபர்களிடமிருந்து கடல் கடந்த வணிகமெனும்மெனும் சுமையை நேரடியாகத் தனது தோள்களில் சுமக்க விருப்பங்கொண்டிருந்த என்று கூறுவது முழுக்க முழுக்கப் பொருந்தாத ஒரு வாதமாகவே தெரிகிறது.

மறாக, அரண்மனை  தன்னை நேரடியாக வணிகத்தில் ஈடுபடுத்தாவிட்டாலும், இந்திய வணிகர்களின் நலன்களைப் பாதுகாக்கிற அல்லது முன்னேற்றுகிற விதத்தில் செயற்பட்டிருக்கலாம் என்ற ஒரு சாத்தியப்பாடு இருந்திருக்க முடியாதா?.. பிற்காலங்களில் ஐரோப்பிய அரச பாதுகாப்பு உதவிகளுடன் இயங்கிய அந்நாட்டுக் கம்பனிகள் போல இந்திய வணிகர்களின் கூட்டமைப்புதங்கள் உள்நாட்டு அரசுகளை, விரும்பியோ விரும்பாமலோ வெளிநாடுகளில் துணிகரமான நாடுகளைக் கண்டடையும் நடவடிக்கைகளில்   உள்வாங்கிருக்கலாமென சில அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.32 இது ஒரு சுவாரசியமான கருதுகோள். இருந்தும் வரலாற்றைப் பொருத்தமற்ற விதத்தில் நவீன காலனித்துவப் போக்குகளுடன் இவற்றை ஒப்பிட்டு வரலாற்றை பின்னிருந்து முன்னாக வாசிப்பதைக் கவனமாகத் தவிர்த்திருக்க வேண்டும். இந்திய நிலைமையின் தனித்துவமான பண்புகளைப் புரிந்துகொள்ள, இந்திய தொலைதூர வாணிபத்தை நுணுக்கமாக ஆராய வேண்டும். ஏனெனில்வரலாற்றின் மத்தியகால இந்தியாவினதும், நவீன ஐரோப்பாவின் ஆரம்பகாலத்திய வர்த்தகமும் பெருவளர்ச்சி பெற்றதற்குக் காரணமாக இருந்தவை ஒன்றுக்கொன்று சம்பந்தமற்ற வேறு வேறான காரணிகள் என்பதை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும்- பதிநான்காம் நூற்றாண்டுக்கு முன்னரான காலத்திய இந்திய வணிகர்களுக்கும் தென்னிந்தியாவின் முடியாட்சிகளுக்குமிடையில் நிலவிய, எந்த முடிவுக்கும் வரமுடியாத தெளிவற்ற உறவை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சோழர்கள் காலம், செழிப்படைந்து வந்த, சிக்கலான, ஒன்றுடனொன்று பிணைக்கப்பட்ட  உள்நாட்டு வெளிநாட்டு வலைப்பின்னல் அமைப்புக்களைக் கொண்தாக அமைந்திருந்து.. இந்த வணிக ஆதிக்கத்தைத் தம் கையில் வைத்திருந்த வணிகர்களின் கூட்டமைப்புக்கள் பல்வேறு வியாபாரத்திறமைகளை நடைமுறைப்படுத்தும் ஆற்றல்களைக் கொண்டிருந்ததுடன் தம்முடைய சில வணிகச் சந்தை மையங்களை தமது கட்டுப்பாட்டிலுள்ள நகர்ப்புற ஆட்சிக்குட்பட்ட பகுதியாகக் கொண்டிருக்கும் திறமையையும் கொண்டிருந்தனர்.. அத்துடன் தங்கள் வியாபாரப் பயணங்களிலும் தமது புதுக்குடியேற்றங்களிலும் தம்மைக் காத்துக்கொள்ள ஆயுதமேந்திய இராணுவத்தை வைத்துக்கொள்ளும் வழமையையும் கடைப்பிடித்தனர். அத்துடன் இவர்களில் சிலர் கடல்கடந்த. வணிகத்திலீடுபடுவதிம் ஆர்வம் கொண்டவர்களாக விளங்கிங்கினர்பல பேரசுகளையும், குறுநில ஆட்சிகளையும் சேர்ந்த பிரதேசங்களை ஊடறுத்துச் செல்லும் தேவையைக் கொண்டிருந்த இந்த
வலைப்பின்னலமைப்பின் இயக்கம்  .,வணிகத்தின் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்ளப்பட்ட அரசியல் நடுநிலைமையைப் பேணுவதில் தங்கியிருந்து. இதற்காக, அரசர்கள் வணிகத்திற்கான வரிவசூலித்தல், அவற்றின் நடைமுறைக்கான சட்டரீதியான கட்டளைகளைப் பிறப்பித்தல் என்ற அளவில் தமது தலையீட்டை மட்டுப் படுத்திக் கொண்டனர். தவிரவும், சில. குறிப்பிட்ட வியாபார மையங்களுக்கு சில உரிமைகள் மற்றும் விசேட சலுகைகளை அடிக்கடி வழங்கியும் வந்தனர். உண்மையில் இந்த வழங்கல்கள் வழியாக அவ்வியாபார மையங்கள் அரசியல் நடுநிலைமையைப் பேணுவதை உறுதிசெய்வதற்கேற்ற நிபந்தனைகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்த வியாபாரக் குழுக்கள், எதாவதொரு குறிப்பிட்ட அரச அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டுச் செயற்படும் வெறும்பிராணிகளாய் இருப்பதை விடுத்து, தமது சொந்த நலன்களுக்கு அமைவான விதத்தில் பச்சோந்திகள் செய்வதுபோன்று உள்ளூர் அதிகாரங்களுக்கு ஏற்ப  போல தம்மை மாற்றிக்கொண்டு செயற்பட்டு வந்தனர். சோழ சாம்ராச்சியம் போன்ற இறுக்கமற்ற பிணைப்பைக் கொண்ட அரசியல் முறைமை நிலவுகின்ற ஒரு சூழலில்  ஏனைய சமூகங்கள்  மற்றும் நிறுவங்களைப் போலவே, வியாபாரிகள் கைவினைஞர்கள் கூட்டுக்கும் அரசவையுடன் ஒரு எச்சரிக்கை கலந்த ஒரு சமநிலையான உறவுப் பேணலைக் கொண்டிருத்தல் தவிர்க்க முடியாததே. இந்த நிலமை,  பின்னாளில் விஜய நகரப் பேரசுக் காலத்தில் குவிக்கப்பட்ட பொருது படைகளின் திட்டமிட்ட முறையில் வணிகர்களுக்கிருந்த பெருமதிப்பும் சலுகைகளும் பறிக்கப்படும் வரை தொடர்ந்தது..33

சோழர் காலத்து வியாபார நடுநிலைமையும் அதன் குறைபாடுகளைக் கொண்டதாகவே இருந்தது; வியாபாரக்குழுக்கள் கைவசமிருந்த தகவல்களும் வளங்களும் அரசவைக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக இருந்தனவியாபாரப் பாதுகாப்புப் படைகள், சிலவேளைகளில் முடி இராணுவத்திற்கு உதவியாக அவர்களுக்கு மேலதிக பலம்சேர்க்கும் படைகளாக இருந்திருக்கின்றன. (இதற்கான  சிறந்த ஆவணச் சான்று) சோழரின் முற்றுகைக்குப் பின்னரான இலங்கை என்ற தலைப்பின் கீழ் விவாதிக்கப்பட்டுள்ளது.) வணிகப் பாதுகாப்புப் படை மற்றைய கூலிப்படைகள் போன்று முழுமையாக நம்பிக்கை வைக்கக்கூடிய படையல்ல என்பதால் முடிக்கு விசுவாசமாய் இருப்போமென்ற கடுமையான சத்தியப்பிரமாணத்தை அவர்கள் செய்யக் கோரப்பட்டனர். சாதாரணமாக இவர்களது உதவி என்பது-  இன்றைய காலத்தில் 'ஒற்றறிதல்' என்று சொல்வது போன்ற-, தொலைதூர தேசங்கள், அரசவைகள், துறைமுகங்கள், செல்வங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதாகவே இருந்தது.. இலங்கைப் பௌத்த பதிவேடுகள் ராஜராஜனின் இலங்கை முற்றுகை குதிரை வியாபாரிகள் கொண்டுவந்த செய்தியின் அடிப்படையிலே முன்னெடுக்கப்பட்டதென்கின்றன. இந்தக்கூற்று உண்மையாகவும் இருக்கலாம் பொருந்தாததாகவும் இருக்க வாய்ப்புண்டு. முக்கியமாகக் கவனிக்க வேண்டியதென்பது என்னவெனில் பதிவேட்டை எழுதியவர்கள் சோழ அரண்மனை வியாபாரிகளிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கு வாய்ப்பிருந்தது என அவர்கள் கருதினார்கள் என்பதுவே ஆகும்..

தங்கள் ஆளுமையின் கீழுள்ள துறைமுக வழி வர்த்தகத்தைச் சோழர்கள் ஊக்கப்படுத்தினர். இதன் மூலம் அதிகளவு துறைமுக வரியைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பே இதற்குக் காரணம் என்பதில் எந்தச்சந்தேகமுமில்லை. எனவே அன்னிய நாட்டு வியாபாரிகளை வர்த்தகத்தினுள் நுழையவிடாமல் தடுப்பதற்கு எந்தத் தேவையும் அவர்களுக்கிருந்தாக சொல்ல முடியாது. இந்திய வர்த்தகர்களுக்கு ஒரு வணிக மேலாதிக்கம் வருவதற்கான நிலமையை உருவாக்குவதற்குப் பதிலாக அவர்கள் அன்னிய வர்த்தகர்களின் வருகையை ஊக்குவித்தனர். முதலாம் ராஜராஜன் (சைவ அரசனான இவனது படைதான் இலங்கையின பெளத்த மையங்களை கொள்ளையிட்டது.) ஶ்ரீ விஜயநகர மன்னன்  மாறவிஜயோத்துங்க வர்மன் சோழத் துறைமுகமான நாகபட்டணத்தில் ஒரு பௌத்த விகாரையை நிர்மாணிக்க அனுமதித்ததுடன் ஒரு கிராமத்தையும் அவ்விகாரையின் பராமரிப்பு செலவுக்காகத் தானமாகக் கொடுத்தான் என்பதை நாம் லெய்டன் கிறான்ற் மூலமாக அறியமுடிகிறது.34 இந்த வேலைத் திட்டம் இந்தியரல்லா வியாபாரிகளின் நன்மை கருதியே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கூடவே, இந்திய வர்த்தகர்களில் பெரும்பான்மையினர் சைவர்களாக இருந்த போதிலும், புறச் சமயக்கோட்பாட்டாளர்களும் சந்தையில் இயங்கும் வகையில் உள்வாங்கப்பட்து அன்றைய சந்தையின் மத இறுக்கங்களைக் கடந்த பண்பினைக் கொண்டிருந்து என்பதைக் காட்டி நிற்கிறது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாகும்..

இலங்கையின் சான்றுகள் என்ன கூறுகின்றன? இந்திய வர்த்தகர்கள் தங்கள் வியாபார - அத்துடன் தொடர்பான இராணுவநடவடிக்கைகளை வட இலங்கைப் பரப்பில் சோழர்களின் பத்தாம் நூற்றாண்டின் கடைப்பகுதி ம்ற்றும் பதினொராம் நூற்றாண்டு கால ஆக்கிரமிப்புக்குப் பின்னரே- அதற்கு முன்னரும் சில வணிக ஊடுருவல்கள் நிலவியிருந்தபோதும் பெருமளவுக்கு விரிவுபடுத்திக்கொண்டனர். .35 ராஜராஜ சோழனின் காலூன்றுதலுக்கு முன்பு இலங்கையின் உள்நாட்டு வர்த்தகம் சிங்கள வியாபாரிகளின் கைகளிலேயே பெரும்பாலும் இருந்துவந்துள்ளது, குறிப்பாக வணகிராமம் (Vanigramayan) வியாபாரிகள் சங்கம் இது பெயரிலும் நடைமுறையிலும் தமிழர்களின் மணிகிராமம் (Manigramam) என்ற வணிகர் குழுமங்களை ஒத்திருந்தது. இவர்கள் சில சந்தை நரங்களில் அதிகார பலமிக்கவர்களாக செயற்பட்டு வந்தனர். இலங்கை அரசர்கள் இவர்களுக்கு விசேட சலுகைகளைஉள்ளடக்கிய பட்டய உரிமைகளை வழங்கி வந்தனர். இந்தப் பட்டைய உரிமகள் எடை நிர்ணயம் செய்யும் உரிமையை அவர்களுக்கு வழங்கியதுடன், சட்டப்பூர்வமற்ற பறிமுதல்களை அரசு செய்தல், வரிவிதிப்பு, சோதனையிடல், தண்டனை என்பன எல்லாவற்றிலுமிருந்து இவர்களுக்கு விடுதலையை வழங்கியிருந்தன. இதே போன்ற சலுகைகள் ( சிலவேளை அவற்றின் ஒரு நகலாக) இந்திய வியாபாரிகளுக்குக்கும் கொடுக்கப்பட்டிருந்த போதிலும் தமிழ் வியாபாரிகள் மீதான காழ்ப்புணர்வு ஒரு வகையில் சிங்கள வியாபரிகள் மத்தியில் நிலவியதற்கான சான்றுகள் உள்ளன. தனிச்சிறப்புடைய 'பதுளை' ஆவணம் வடஇலங்கை சந்தை நகரிற்கு கொடுக்கப்பட்ட விசேட உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பதிவு செய்துள்ளது. பத்தாம் நூற்றாண்டின் மத்தியகாலப் பகுதியைச் சேர்ந்த இந்த ஆவணப் பதிவில் தமிழர்களிடமிருந்து சலுகைகள் மற்றும் நட்பாதரவைப் பெற்ற ஒரு பிரபு இந்தக் சந்தை நகர குடியேற்றத்தினுள் நுழைய வருவாரானால், அவர்  அனுமதிக்கப்படமாட்டார்.’ 36என்ற குறிப்பையும் பார்க்க முடிகின்றது. இந்தக் குறிப்பின் சரியான கருத்தினை அது அரசியல் ரீதியானதா பொருளாதார ரீதியானதா என தெளிவாகப் புரிந்துள்ள முடியவில்லை. இந்த ஆவணம் முதலாம் ராஜரானின் படையெடுப்பிற்கு முந்தையதாக இருப்பதால் சிங்கள உயர்குடியினர். ராஜராஜனின் படையுடன் ஒத்துழைத்தார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியாது. பேராசிரியர் பரணவிதான இதனை அரசியல் அடிப்படையில் விளக்குகின்றார். இது முதலாம் பராந்தகனின் குறுகிய காலத் தண்டெடுப்பை விளக்குவது என்பது அவர் வாதம்.37 இந்தக் கூற்றின் உட்பொருள் எதுவாக இருப்பினும், தமிழர்களால் இராணுவ ரீதியாக மற்றும் வர்த்தக ரீதியாக இரண்டு விதத்திலும் அச்சுறுத்தல்கள் வரலாம் என்ற பயம் இருக்கின்றதென்பது  திண்ணம்.

மற்றைய சாசனச் சான்றுகள் ஐந்நூற்றுவர், வளஞ்சியர், நகரத்தார் போன்ற இந்திய வியாபாரச் சமூகங்கள்   நாளடைவில் சிங்கள வியாபாரச் சமூகங்களைச் சோழர் காலத்தில் வட இலங்கையின் பிரதான வியாபாரத் தடங்களிலிருந்து வெளியே தள்ளின எனவும் விளம்பு கின்றன. சோழ ஆதிக்கம் வியாபாரத்திற்கான இவற்றுக்குச் சாதகமான சூழலை உருவாக்கியதென்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இருந்தும் சோழப்படையெடுப்பு வியாபாரிகளின் வர்த்தகப் பெருக்கத்திற்காகவே நடந்து என்பது போன்ற கண்மூடித்தனமான முடிவுக்கு வந்துவிடக்ககூடாது. மேலும் ஐந்நநூற்றுவர் தங்கள் வர்த்தகத்தை கடல்தாண்டி சுமாத்ரா வரை விரிவுபடுத்தியிருந்தனர். எந்தவிதமான விரிவாக்க அரச நடவடிக்கைகளுடனும் சம்பந்தப்படாமலே அவர்கள் இதனைச் செய்திருந்தனர்,.38

மத்திய கால இலங்கையில் இந்திய வர்த்தகர்களின் சம்பந்தப்படல் தொடர்பான முக்கிய கவனத்துக்குரிய ஒன்றாகவும் அதே வேளை, மதிப்பீடு செய்ய மிகக் கடினமாக இருப்பதுவும் அன்றைய இராணுவமே. சோழ  இராணுவம் இலங்கை அரசர்களுக்கு ஊழியம் செய்த இராணுவத்தைப் போல் கூலிப்படைகளிலேயே பெரிதும் தங்கியிருந்ததெனச் சொல்லப்படுகின்றது. இதில் சில கூலிப்படைக் குழுக்களை இந்திய வர்த்தகர்களின் குழுக்கள் வழங்கினார்கள் என்றும் உள்ளது. இந்த விவாதத்தின் சிறப்புத் தகுதிகள் எவையாயிருந்தாலும், சோழ இராணுவ இராட்சிய விரிவாக்கத்துக்கான இந்த ஆதரவை  வழங்கியது வெறும் 'வர்த்தக நோக்கத்துக்கான தூண்டுதலால்மட்டுமேயெனப் பார்ப்பது குறைப்பார்வையாகவே இருக்கும். கூலி இராணுவத்தை வழங்கும் ஏற்பாடுகளுக்கும் தமது வியாபார மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான வணிகர்களின் மூலோபாயத்துக்கும் கட்டாயமான தொடர்பிருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், அவர்களது முதன்மை நோக்கு இதன்போது செய்யப்படும் கொள்ளையில் ஒரு பங்கைப் பெற்றுக்கொள்வதாகவே இருந்திருக்க வேண்டும். இதுவே சோழ நிலச்சுவாந்தர்களையும் பங்குபற்றத் தூண்டியிருக்க வேண்டும்.
ஆனால், இந்த வர்த்தகர்களால் வழங்கப்பட்ட படைகள் உண்மையிலேயே சோழ இராணுவத்துடன் இலங்கையில் இணைந்தனவா? பொதுப்படையாக எழுதப்பட்ட சோழ கல்வெட்டுக்கள் இந்த விடயத்தில் நமக்கு பெரிதாக உதவவில்லை. இருப்பவையும் நேரடியான சான்றுகளாக இல்லை.. சோழர்கள் தீவிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட பின்னர் வேளைக்காரப் படைகள் எனத் தம்மை அழைத்துக் கொண்டவர்கள் இலங்கை அரசர்களால் சேவைக்கு அமர்த்தப்பட்டனர் என்பது எமக்குக் தெரிந்த விடயம். இவர்கள் தங்களை ஐநூற்றுவர் வளஞ்சியர்கள் அல்லது நானாதேசி வணிகர்களின் பணியாளர்களென அடையாளப்படுத்திக் கொண்டனர். அவர்களின் கூற்றுப்படி, அவர்கள் பிராமணரல்லாத சாதிகளில் இருந்த வலங்கை இடங்கைப் பிரிவுகளிலிருந்து திரட்டப்பட்ட தென்னிந்தியர்கள் ஆவர்.39 முதலாம் விஜயபாகு இவர்களைப் பொலநறுவையிலிருந்த புனித தந்தம் பேணப்பட்ட விகாரையின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தினான் என்பதுவும் இங்கு குறிப்பிடத் தக்கத்து.40 விஜயபாகு சேவைக்கமர்த்திய இந்தியக் கூலி இராணுவம் இந்தியாவில் நுழைந்து கொள்ளையடிக்க இசையச் சொல்லிக் கேட்டபொழுது பின்வாங்கியதாகவும் - சிறிது சிரமத்தின் பின் - சிங்களப் படையினரின் பலவந்தத்தால் அடங்கிச் செயற்பட்தாகவும் பௌத்த பதிவேடுகள் சான்று பகிர்கின்றன.41 பன்னிரண்டாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் கோலோச்சிய முதலாம் பராக்கிரமபாகு இந்தியப் படைகளை வெகுவாகப் பயன்படுத்தினார். சோழர்களைப் பின்பற்றியே பராக்கிரமபாகு இப்படைகளைத் தனது இராட்சிய தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டார் என்ற ஒரு ஆய்வுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது .ஆனால் சான்றுகள் அடிப்படையில் இதை நிறுவ முடியவில்லை. சோழர்கள் பல வேளக்காரப் படைப்பிரிவுகளைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பது நிச்சயமான உண்மை. ஆனால் சோழர்களின் சேவையிலிருந்த எல்லா வேளக்காரப் படையினரையும் வாணிபக் கூட்டுக் குழுக்களே ஏற்பாடு செய்தார்கள் என முடிவுக்கு வருவது பிழையானது; அது உண்மையுமல்ல.

நியாயமாக நம்மால் கூறக்கூடியது என்னவெனில் இந்திய வியாபராக் கூட்டினர் சோழர்களது ஆக்கிரமிப்புக்குப் பின்னரே பெரியளவில் தங்கள் வர்த்தகத்தை விருத்தி செய்தனர் என்பதும் அவர்கள் தமக்கெனப் படையினரைக் கொண்டிருந்தனர் என்பதுவும்- நிச்சியமாக இது தங்கள் வியாபாரத்தைப் பாதுகாக்கவென்றே கொண்டிருந்திருக்க வேண்டும்- அத்துடன் சோழ அரசுப்படையின் தேவைகளின்போது இணைந்து செயலப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு என்று கருதமுடியும் என்பதுதான்.. சோழர்களின் வெளியேற்றத்திற்குப் பின்பு (ஏறத்தாழ 1070) இலங்கை அரசர்களுக்கும் வியாபாரப் பாதுகாவல் படையினரையும், அதே போல் கூலி இராணுவத்தினரையும் பயன்படுத்தினர். இதன் விளைவுகள் பலவித தன்மைகளைக் கொண்டதாக இருந்தன. எப்படியிருப்பினும் கா.இந்திரபாலா குறிப்பிடுவதுபோல் இந்திய கூலி இராணுவம் பற்றிய ஆரம்பகால பதிவேடுகளின் குறிப்புகளின்படி அவர்களைச் சேவைக்கமர்த்தும் வேலைகொடுப்போர் அது  அரசர்களாகவோ, அரச எதிர்ப்பாளர்களோ யாராக இருப்பினும் இந்தியாவிலிருந்துதான் அவர்களை வரவழைக்க வேண்டியிருந்ததெனப் பேசுகின்றது. ஆனால் முதலாம் விஜயாபாகுவின் காலத்தில் இலங்கைச் சாசனங்களில் வேளக்காரர் எனும் பதம் உபயோகப்படுத்தப் படுத்தப்ப பட்டிருப்பினும் அவர்களை இந்தியாவிலிருந்து வரவழைத்ததாக எந்தக் குறிப்புமில்லை. எனவே இந்தியாவிலிருந்து வரவழைக்காமல், உள்ளுரிலேயே அவர்களைத் திரட்ட முடிந்திருந்து இதற்குக் காரணமாக இருக்கலாம்.42

பலப்படுத்தலும் சிதைவும்
          
ராஐரட்டையில் சோழர்களின் கொள்ளைகள் நிறைந்தகாலத்தை அடுத்து ஓரளவுக்கு தமது அதிகாரத்தை ஒருங்கிணைத்துப் பலப்படுத்தும் காலகட்டம் தொடங்கியது. து. பொலநறுவையில் சைவக் கோவில்கள் நிர்மாணிக்கப்பட்டன மகாதித்தத்தில் (மாதொட்டை) இருந்த தற்காலிக இராணுவப் பாசறைகள் பாதுகாப்பான நிரந்தர இராணுவக் கோட்டங்களாக மாற்றப்பட்டமை என்பன, சோழர்களின் நிரந்தர இருப்பிற்கான எண்ணத்தை வெளிப்படுத்தியது.43 வரி வசூலிப்பிற்கான முயல்வுகளும் குறிப்பாக வர்த்தகர், கைவினைஞர்கள் மீதான வரி விதிப்பிற்கான முயற்சிகளும் தெரிய வருகின்றன. ஆனால், நமக்குக் கிடைக்கும் ஆவண ரீதியான சான்றுகள்  நகர்ப்புற வரி விதிப்புபற்றி மாத்திரமேபிரதான வீதியில் வியாபாரம் செய்வோர் மீதான வரிவிதிப்பு, நூற்போர், நெய்வோர் மீதான வரிவிதிப்புபற்றி மட்டுமே பேசுகின்றன.44  கிராமப்புற வரிவிதிப்பு திறைமைகள் பற்றிய எந்தக் குறிப்பும் ஆவணங்களில் இல்லை. பௌத்த பதிவேடுகளிலின் பதிவுகளிலிருந்து, சோழர்கள் வடக்கில் பலம் பொருந்தியவர்களாக இருந்த காலத்தில் இவ்வரிகள் கோரப்பட்டும் பகுதி வரிகளாவது செலுத்தப்பட்டிருக்கவும் வாய்ப்பு இருந்திருக்கிறதுடன். நூற்றாண்டின் மூன்றாம் பாகத்தில், அதாவது சோழர்களின் கட்டுக்கோப்பு சிதைந்த காலத்தில் ரஐரட்ட மக்கள் வரி கொடுக்கத்தயாராக இருக்கவில்லை என்றும் முடிவுக்கு வரக்கூடிய சாத்தியங்கள் உண்டு.  .45
முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சியில்- இவன் சோழ பரம்பரையில் மூர்க்கங் கொண்ட வலுச்சண்டைக்காரன்.- சோழ இராணுவம் ரஜரட்டையிலிருந்து தென்பகுதியான ரோகணவிற்குள் படையெடுப்பை நீட்டித்தது. தனது ஐந்தாவது ஆண்டில் இலங்கை முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தாக உரிமைகோரினான். சில வரலாற்றியலாளர்கள் ராஐராஐன் தொடங்கியதை ராஜேந்திரன்முடித்துவைத்தான்என்று இந்த உரிமை கோரலை உண்மையென வாதிடுகின்றனர். ஆனால் சோழர்களால் தென்னிலங்கையில் என்றுமே தங்கள் அதிகாரத்தை ஒன்றிணைந்த அதிகாரமாக நிறுவ இயலவில்லை. எவ்வாறாயினும், சோழருக்கு தமது இருப்பை நிலைப்படுத்தும் ஆவலைத்தூண்டக்கூடிய பெருமளவிலான செல்வச் செழிப்புள்ள குடியேற்றங்களும் அங்கு இருக்கவில்லை . இதனால் இலங்கையில் ராஜேந்திர சோழனின் வெறிபிடித்த எல்லை விரிவாக்கம் அதற்கான செலவீனத்துடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் வருமாமானத்தைக் கொண்ட ஒரு நிலையை எதிர் கொண்டது.

முரண்நகையாக வடக்கில் சோழக்குடியிருப்புக்கள் தாக்குதலுக்கும் கொள்ளைகளுக்குமான இலக்காக மாறின. ஒரு காரணம் சிங்களஎதிரிகள்” - இதனை ஆதரித்த முந்தைய முடியின் எஞ்சிய சிலரும் பிராந்தியக் குழுத்தலைவர்களும் - தற்போது சிதறடிக்கப்பட்டுப் பரவியிருந்ததால் கெரில்லா முறையில் தங்கள் எதிர்ப்பை ஒழுங்குபடுத்தும் வல்லமையுடையவர்களாக இருந்தனர். முந்தைய முடியின் அரண்மனை எதிர்தாக்குதல்களின் மையப்புள்ளியாக இருந்ததால் சோழர்கள் அவர்களைக் கைது செய்வதில் முனைப்பாக இருந்தனர். அரசன் மகிந்தாவை ராஜேந்திரனின் படைகள் கைது செய்து இந்தியாவிற்குக் கொன்று
சென்றதையும் அவன் அங்கு இறந்து போனதையும் சூளவம்சம் ஒத்துக் கொள்கின்றது.46 மகிந்தவின் குமாரன் இளவரசன் கசப்பா (Kassapa) ரோகணவில் ஒளிந்திருந்தான். சோழர்கள் அவனைக் கைது செய்ய எடுத்த எல்லா முயல்வுகளும் தோல்வியையே தழுவின. கசப்பா முதலாம் விக்கமபாகு (Vikkamabahu -I) எனும் பட்டத்தை தழுவி ரோகணவைப் பல ஆண்டுகளாகஆட்சி புரிந்தான்” (.1029-1041).47 தனது அட்சியில் சோழருக்கெதிரான எழுச்சியையும் இலங்கையை ஒருகுடையின் கீழ் கொண்டு வரும் முயல்விலுமே அவனது ஆட்சிக்காலம் கழிந்தது. ஆனால் தனது ஆட்சியை ஒருங்கிணைப்பதற்கு முதலே அவன் இறந்து போனான். இதே ஆவலுடைய பலர் குறுகிய காலம் தோன்றுவதும் மறைவதுமாகக் காலம் கழிந்தது. சோழர்களை வடக்கிலிருந்து விரட்ட இவர்களால் இயலவில்லை.

பதினொராம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் றோகணவில் நம்பிக்கை நட்சத்திரமாகச் சிங்கள அரசகுமாரன் கிற்றி தோன்றினான். எதிர்காலத்தில் முதலாம் விஐயபாகு (1059-1114). என அறியப்பட்டவன். இலங்கை அரசகுலத்தின் வழித்தோன்றல் அல்லது தன்னை இலங்கை அரசகுலத்தின் வழித்தோன்றலென உரிமை கோரியவன்.48 தனது பதினேழாம் பராயத்திலேயே றோகணவில் பலம் பொருந்திய எதிரியை வெற்றி கொண்டான். சோழர்களைப் பொருதப் பேராவல் கொண்டவனாயுமிருந்தான். மறுபடியும் சோழர்களுக்கு கரந்து வாழ்ந்து நழுவித்தப்பிக் கொள்ளும் எதிரிக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. வடக்கின் அரண் காப்பிடங்களிலிருந்து தென்னிலங்கையைக் கட்டுக்குள் கொண்டு வர நினைத்த சோழர்கள் ஏற்கனவே சிங்கள அரசர்கள் சந்தித்த முடிவுக்குக் கொண்டுவரமுடியாத அதே பிரச்சினையை எதிர் கொள்ள வேண்டியிருந்தது.-ம்: கீழ்ப்படியாத குறுந்தலைமைகள் நாடு முழுவதும் சிதறிக்கிடந்தன. இவர்களுடன் இணையத் தயாராகவிருந்த கிளர்ச்சிக்குழுக்கள் இவர்களின் இணைவுக்குக் காரணமேதுமிருப்பின் அதற்கு சந்தர்ப்பவாதமன்றி வேறொன்றுமில்லை என்பன. விஐயபாகுவிற்கும் இதேமாதிரியான சிக்கல் இருக்கத்தான் செய்தது. உள்நாட்டுக் குறுந்தலைமைகள் விஐயபாகுவைச் சோழரிலும் பார்க்கத் தங்கள் சுதந்திரத்திற்குப் பங்கம் விளைவிப்பவனாகப் பார்த்ததை அவன் சகித்துக் கொள்வதன்றி வேறு வழியற்றிருந்தான்.49 இதன் காரணமாக ஓரளவு கூட்டைச் சோழர்களால் றோகணவில் சம்பாரிக்க முடிந்தது. விஜயபாகுவால் தனக்கென பாதுகாப்பான தளமொன்றை அமைத்து அங்கிருந்து தமிழருக்கெதிரான போர் நடவடிக்கைகளில் அவ்வப்போது ஈடுபடமுடியாது போயிற்று. மறுபுறத்தில் சோழர்களாலும் வடக்கில் தமக்கெதிரான எதிர்ப்புக்கள் அடக்க வகையற்றிருந்தனர். படிப்படியாக வடக்குத் தெற்கு முரண் சாய்ந்தாடி மர விளையாட்டுபோல் தாக்குதல் எதிர்தாக்குதல் என நீண்டு கொண்டே போனது. விஐயபாகுவின் இராணுவம் பொலநறுவைக்கு முன்னேறுவதும் பின்னர் தக்கிண தேசக்காடுகளுக்குள் பின் வாங்குவதுமாக இருந்தது அல்லது றோகணவிற்குச் சென்றது. இந்த நடவடிக்கைகள் மூலமாகவே சோழர்களின் தாக்குதல்கள், முற்றுகையிலிருந்து அவர்களுக்கு தம்மைப் பாதுகாக்க முடிந்த்தது.

ஆனால் காலம் ஆட்சி எதிர்ப்பாளர்கள்  பக்கமே இருந்தது. சோழர்களின் மன உறுதி தடுமாற ஆரம்பித்தது. விஐயபாகுவுக்கு பின்னால் ஒரு ஒன்றிணைக்கப்பட்டதேசியஇராணுவம் இல்லாதிருந்த போதிலும் சோழர்களை விட கேந்திர முக்கியத்துவ ரீதியான அனுகூலம் அவனுக்கிருந்தது. அதுதவிர தொடர்ந்து நீடித்த யுத்தம் சோழர்களைவிட அவனுக்கே பெருமளவில் சாதகமாக அமைந்தது. வீரராஜேந்திரனின் முடிசூடலிற்குப் பின்பு (1063-69) சோழர்கள் இலங்கையில் மாதிரமன்றி இந்திய குடாநாட்டிலும் தற்காப்பு நடவடிக்கைகளையே மேற்கொண்டனர். இந்தியாவில் சாளுக்கியர்கள் தக்காணத்திலிருந்து கடுந்தாக்குதல்களைத் தொடுத்தனர். தென்னிலங்கையில் இறுதியாகத் தன்னைப் பலப்படுத்திக் கொண்ட விஐயபாகு வெற்றிகரமான இருமுனைப் போரை அநுராதபுரம் பொலநறுவை மீது நடாத்தினான். அனுராதபுரம் சீக்கிரமே அவன் கைகளில் வீழ்ந்தது. பொலநறுவை துண்டிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்ட சோழப்படையினரைச் சுற்றி வளைத்துத் தொடுத்த நீண்ட முற்றுகையின் பின்னரே வீழ்ந்தது. முழுத்தோல்வியைத் தடுத்து நிறுத்த வீரராஜேந்திரன் தலை நிலத்திலிருந்து படைகள் அனுப்பும் கட்டாயத்திற்குள்ளானான். வட இலங்கையில் குடிநகரங்களைக் கைப்பற்றவும் றோகணையைத் தாக்கவும் இப்படைகளின் தேவையிருந்தது. ஒருகாலத்தில் இலாபகரமான திடீர் தண்டெழுச்சி, பின்பு ஆக்கிரமிப்பு என இருந்து படிப்படியாக மேலாண்மையை இழந்து வடக்கில் தம்மை நிலைநிறுத்த நம்பிக்கையற்ற போரை நடாத்தும் நிலைக்குச் சோழர்கள் தள்ளப்பட்டனர்.

விஐயபாகு இறுதியில் சோழர்களைச் சமுத்திரத்தை நோக்கித்தள்ளி விட்டானெனக் கற்பனை செய்வது நாடகத்தனமானது போல .  இருப்பினும், முடிவுக்குவராத மேலதிக மோதல்களின் பின் சோழர் முற்றுகை முடிவடைந்தது. சோழப் பேரசின் விரிவாக்கம் நிலநிறுத்தப்படல்  என்ற பேரலைக்குக் காரணம் அதன் உள்ளுரம் வாய்ந்த தாய்நில அரச தலைமைகளும் சோழ பாரம்பரிய முடிக்கெதிரானவர்களின் கட்டுக்கோப்பின்மையும் என்றால் தாய்நிலத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் எதிரி முகாமின் திறமையான தலைமைகளும் அந்த அலையின் ஓய்வுக்குக் காரணமாய்  அமைந்தன. சோழ அரண்மனையில் நடந்த அரசியல் குழப்பங்களின் பின்னர் சோழ அரியனை ஏறிய சாளுக்கிய சோழ இளவல் முதலாம் குலோத்துங்கன் (1070) முதலில் இந்தியாவில் தன் அதிகாரத்தைப் பலப்படுத்துவதில் கவனமெடுத்தான். தன் நேரடி மூன்று முன்னையவர்கள் ( ராஜாதிராஜன், இரண்டாம் ராஜேந்திரன், வீர ராஜேந்திரன் மூவரும் முதலாம் ராஜேந்திரனின் புதல்வர்கள்) இலங்கை வீரதீர பயணத்தில் அவனுக்குப் பெரிதாக ஈடுபாடற்றிருந்தது குலோத்துங்கனின் தனிப்பட்ட சுயகௌரவம் இலங்கை சோழராட்சியில் பெரிதாகத் தங்கியிருக்கவில்லை எனவே சோழ இழப்புக்கள் மீளப்பெறமுயலாது இலங்கை விவகாரத்தை அவன் தொடராது முடிவிற்குக் கொண்டு வந்தான். சோழர் ஆக்கிரமிப்புக் காலத்தில் இலங்கையிலிருந்து எந்தக் கொள்ளைத் தண்டெடுப்போ தலையீடுகளுமில்லாதவாறு இந்தியப் பெருநிலம் பாதுகாப்பாக இருந்தது. இலங்கையின் நச்சரிப்பும் தொல்லைகளும் சோழப் பின்வாங்கலின் பின்னர் பதினொன்றின் கடைக்கால் பகுதியில் மீண்டும் தலையெடுத்தது. பாண்டியதேசத்தை சோழர்களால்  எந்தக்காலத்திலும் முழுமையாகத் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரமுடியவில்லை. பாண்டிய அரசியலில் மீள ஆரம்பித்த சிங்களத் தலையீடு பாண்டிய மண்டலத்தின் மீதான சோழ அதிகாரத்தை மேலும் நலிவுறச்செய்தது.50 முதலாம் குலோத்துங்கன் போர்முனைப்புடைய திட மனத்துக்காரனாயிருந்தும் அவன் தன் கவனம் முழுவதையும் வடக்கின் மேல் குவித்திருந்தான். குறிப்பாக வேங்கி மீது அவன் கவனம் பதிந்திருந்தது. அங்கு அவன் கிழக்கு சாளுக்கிய இளவலாக இரண்டாம் இராஜேந்திரா என்ற பட்டத்துடன் கோலோச்சியவன். வடக்கில் கலிங்கர்கள் (ஒரிசா) வேங்கிக்குள் நுழைந்து விடாது வடக்கிலேயே முன்னேற்பாட்டுப் போரை நடாத்தி அவர்கள் அசைவைத் தடுப்பதற்காக அவன் முன் முயல்வுகளில் ஈடுபட்டிருந்தான். முன்பு சோழர்கள் பாண்டிய நாட்டை தங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்க இலங்கையில் நுழைந்தது ஒரு பகுதிக் காரணி போல் இவனும் வேங்கியில் கவனம் செலுத்தினான். இரு நடவடிக்கைகளிலுமே இறுதி வெற்றி பெரிதாகக் கிடைக்கவில்லை.51

சோழ இராட்சியத்தின் விரிவிற்கான ஊக்குமூலமும் திசைகாட்டியும் உள்நாட்டு வெளிநாட்டு நிகழ்வுகளின் கலப்பில் இரு திசைப்பயன் விளைவுகளிலேயே நுட்ப நுணுக்கமாகத் தங்கியிருந்ததென்பதை நாம் பார்க்க முடிகின்றது. உள்நாட்டுக் காரணிகள் அல்லதுஅழுத்த விசைக்காரணிகளில் நிர்பந்தமாகவும் முதன்மையாகவும் இருந்தது. காவிச் செல்லக்கூடிய செல்வங்களுக்கான தேடல். இணையாக இராணுவ உபதலைமைகளை ஒன்று திரட்டி இலாபகரமான பொருளீட்டும் விரைவுப்படை எழுச்சிகளில் ஈடுபடுத்தல். எனவே இராணுவக் குறுந்  தலைமைகள் மீதான முடியின் முழுமையான அதிகாரமின்மை இராணுவ விரிவாக்கத்திற்கு ஒரு தடையாக இருக்காது. - உண்மையில் இதுவே இராணுவ விரிவாக்கத்திற்கான காரணிகளில் ஒன்று - விசையாற்றலுடைய முடித்தலைமை படைதிரட்டலுக்கான அதிகாரத்துடனும் திரட்டிய படையின் மோதாற்றலை தளராது தாங்கிப்பிடிக்கும் சக்தியும் கொண்டதாக இருக்க வேண்டும். முதலாம் இராஜேந்திரனது பரிபாலனம் வரை இந்த மோதாற்றல் நன்றாகவே தளராது தாங்கிப்பிடிக்கப்பட்டது. சோழரின் ஆரம்ப இலங்கை வெற்றிகள் தொடர்ந்தது. - இது இயல்பான நிகழ்வாகக் கூட இருக்கலாம் - இன்னும் பேராவலுடனான 1025ன் ஶ்ரீவிஜயத்திற்கெதிரான கடற்படைத் தாக்குதல் அந்தத் தென்கிழக்காசிய சோழத்தண்டெழுச்சி சோழ சாம்ராச்சிய விரிவாக்கத்தின் அதியுயர் நிலைப் புள்ளியாகவும் சோழர்களின் கொள்ளை வெறியின் அதியுச்ச வெளிப்பாடாகவும் அமைந்தது.

வெளி அல்லதுஉள்ளிழுக்கும்காரணிகள் பொருளாதார மற்றும் கேந்திர முக்கியத்துவம். வாய்ந்தவை, கொள்ளைக்கான வளவாய்ப்பு, எதிரிகளின் அச்சுறுத்தல் இரண்டுமே சோழ விரிவாக்கத்தின் திசையை நிர்ணயித்தன. நீண்டதூர கொள்ளைத் தண்டெழுச்சி இலாபகரமானதாக மாதிரமன்றி அது - சிறிது காலத்திற்கேனும்சோழத் தலைநிலத்திற்குப் பாதுகாப்பாக அமைந்ததுடன், எதிரி அரசர்களைப் போர்முனைப்பற்ற தற்காப்பு நிலைக்கும் தள்ளியது. வட இலங்கையில் கொள்ளைக்கான வளம் விரைவில் வற்றிப்போகச் சோழர்கள் பலமான இராணுவப் பாசறைகளை அமைக்கவும், அடிப்படை வருமான வாய்ப்பாகத் திறை/வரி என்பவற்றை வசூலிக்கும் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கவும் செய்தனர். அவ்வப்போது தூரதேச சூறையாடல்களையும் மேற்கொண்டனர். தங்கள் பலவீனத்தை பெருக்கும் வகையில் சோழர்கள் தாங்கள் பெற்ற இலாபத்தைவிடப் பன்மடங்கு வளங்களைச் செலவு செய்தனர். இதனால் 985-1070 கால இடைவெளி தென்னிந்திய அதிகாரத்தின் விரிவாக்க, கட்டுமான சுழற்சிக் காலமாகப் பதிவாகின்றது. இக்காலப்பரப்பில் இலங்கை பெரிதாக ஆவலைத் தூண்டினாலும் பின்னர் பெரும் சுமையாகவும் மாறியது. பின் வந்த காலங்களில் முதலாம் குலோத்துங்கன் முடிசூடிய காலம் 1070 இல் இலங்கை இலாபத்திற்கான பெரிய வளம் என்ற எண்ணம் சோழச்சிந்தனையில் படிப்படியாக மங்கி வந்தது. ஆனால் பிரச்சினை மையங்களில் ஒன்றாக அவர்களது மனதிலிருந்து விலகவில்லை. சோழச் சேனைகளின் பெருநகர்வுகள் புதிய திசை நோக்கி நகர்ந்தாலும் தென்னிந்திய மரபுவழி முடியாட்சியின் உள்ளார இரண்டறக் கலந்திருந்த அரசியல் குழப்பங்கள் முன்னைய போலவே தொடர்ந்தன.

அடிக்குறிப்புக்கள் (இருபகுதிகளுக்கும் )
  1. See especially W. M. K. Wijetunga, ''Some Aspects of Cola Administration of Ceylon in the Eleventh Century," University of Ceylon Review, XXIII, I-2 (I965), pp. 67-8I.
  2. E g., in contrast to the glowing Chola references to the Deccan campaigns of Rajar5ja i, the Hottur inscription (A.D. I007-08) of the Ca1ukya king Satyasraya describes the Chola army as ravaging the whole country, perpetrating murders of women, children, and Brahmans, seizing women, ... over- throwing the order of caste,' etc. Epigraphia Indica, XVI (I92I-22), No.II
  3. The concept of free-flowing resources has been developed by S. N. Eisenstadt in The Political Sys- tems of Empires (Glencoe: Free Press, I963).
  4. For related observations on center-hinterland relations in this period, see George W. Spencer and Kenneth R. Hall, "Toward an Analysis of Dynastic Hinterlands: The Imperial Cholas of Eleventh Cen- tury South India,'' Asian Profile, II, I(I974), pp. 5I-62.
  5. See my "Temple Money-Lending and Livestock Redistribution in Early Tanjore," Indian Economic and Social History Review, V, 3 (I968), pp.
  6. The Rigvedic account of the afvamedha lists cows and horses among the legitimate objects to be seized. RV, I, I62.22.
  7. CUlavamnsa [hereafter Cv.] 50.I5. Presumably some of these Tamils were immigrant mercenaries or the descendants   of earlier mercenaries who had become involved in Ceylonese politics during the preceding two centuries, but the Chronicle does not enlighten us on this point.
  8. Cv. 50.33-36. The Chronicle frequently likens the Damitas to devils.
  9. Cv. 5I.27-5I. The Ceylonese troops, upon capturing Madurai, are said to have "plundered it completely.
  10. Many years later, in the late eleventh century, the Chola king Kul6ttunga I would be described in his eulogy as ''pleased to seize the pearl fisheries of the Madurai country." South Indian Inscriptions, IJ, Part JJ (i892), No. 58. On Ceylon, see A. Appadorai, Economic Conditions in Southern India (I000-I500 A.D.) (Madras: Univ. of Madras, I936), p. 459.
  11. The Chronicle suggests further decimation of the Ceylonese troops during this campaign, due to plague. Cv. 52.77-8I " Cv. 53.8-IO
  12. Cv. 53.8-10
  13. Cv. 53.47ff.
  14. 993 Corresponds to the earliest date of inscriptions that include Ilamandalam (Ceylon) among Rajaraja's conquests. Although the Culavamsa comments upon this period in detail, it does not refer to Rajaraja by name, so it is difficult to disentangle the events of his reign from later developments, except by synchronism with Chola inscriptions. Further evidence relating to Rajaraja's invasion is noted below.
  15. Wilhelm Geiger has argued that this use of Indian mercenaries was necessary because the indigenous Sinhalese warrior class had become at- tached to the land and as a result had lost its mobility. See Heinz Bechert (ed.), Culture of Ceylon in Mediaeval Times (Wiesbaden: Otto Harrassowitz, Ig6o), p. 30. Whatever the reason, the price that was paid was high; the mercenaries created as many problems as they solved.
  16. Cv. 44.7I-73
  17. Cv. 44.105ff.
  18. The Culavamsa refers to Rohana's "terrible wildernesses'' (5I.I36), which account for its popularity as a refuge for defeated kings, princes, rebels, etc. The mountainous central region of the island, Malayadesa, frequently served the same purpose. Cv. 5I.II2ff. Cv. 44.I30 ff.
  19. Cv. 44.I30 ff.
  20. The compiler of the relevant section of the Chronicle was the bhikkhu Dhammakitti, who lived in the late twelfth century. Since he relied upon various unidentified sources for his narrative, I have referred to "chroniclers" in order to encompass both Dhammakitti and his unknown literary informants. For a discussion of the attitudes and values reflected in the Chronicle, see L. S. Perera, "The Pali Chronicle of Ceylon'' in C. H. Philips (ed.), Historians of India, Pakistan and Ceylon (London: Oxford UJniv. Press. i96I), pp. 29-43.
  21. Cv. 55.3-5
  22. This invasion is said to have taken place in the thirty-sixth year of the reign of Mahinda V, which corresponds to 1017. If true, that would place the Chola occupation of Rajarattha after the reign of Rajaraja I, in the time of his son Rajendra I. But the year IOI7 is an improbably late date for the invasion; Rajaraja had in fact established a strong foothold in Ceylon before that year. We know that a Saivite temple was constructed in Polonnaruva in the time of Rdjar5ja (Archaeological Survey of Ceylon, Report for I906, pp. I7ff.), and revenues of five villages in Ceylon were assigned to the great temple in Tanjore by that king (South Indian Inscriptions, III, Part III (I920), No. 92.) Hence, the number 36, like so many other numbers provided by the Chronicle, is probably a mere rhetorical device, a multiple of the magic number twelve
  23.  Cv. 74. I
  24. As noted below, the Chola kings, though militantly Saivite, also patronized the Buddhist vihara at N5gapattinam. Similarly, Brahmanical advice and rites flourished at the Ceylonese court throughout the medieval period. See Geiger (n. i6 above), pp. I76-77.
  25. Many of these were debt-slaves, but Tamil war-slaves were sometimes put to work on pious projects as well. Cv. 44.70-73
  26. 27 Cv. 46.20-22
  27. Geiger (note 16 above), p. I93.
  28. Cv. 55.I6-22
  29. Pali: Pulatthinagara; the Cholas called itJana- nathamangalam, after one of Rajaraja's titles.
  30. See S. Paranavitana, "The Capital of Ceylon during the ninth and tenth centuries," Ceylon Journal of Science, 11 (I928-33), pp. I4I-47.
  31. K. A. Nilakanta Sastri in History of Ceylon, ed. by H. C. Ray et al. (Colombo, I959), p. 349; also A. L. Basham, "The Background to the Rise of Parakkamabahu i," Ceylon Historical Journal, IV, I-4 (I954-55), p. I5.
  32. See especially K. Indrapala, "South Indian Mercantile Communities in Ceylon, circa 950- I250,' Ceylon Journal of Historical and Social Studies, n.s. I, 2 Uuly-Dec I97I), pp. IOI-I3. Certain problems of terminology arise in discussing these communities. K. Indrapala has cogently argued that the conventional use of terms such as corporation'' or guild'' in this context is in- appropriate, since these terms carry implications about corporate organization that cannot be sustained by the evidence. "It seems more appropriate to call [the Ainniurruvar] a community of merchants with common origins, interests and beliefs.''; quotation from p. 29 of his "Some Medieval Mercantile Communities of South India and Ceylon," Journal of Tamil Studies, II, 2 (Oct I970), pp. 25-39.
  33. Burton Stein, "Coromandel Trade in Medieval India,'' in Merchants and Scholars. Essays in the History of Exploration and Trade, ed. by John Parker (Minneapolis: Jniv. of Minn. Press, I965), pp. 49-62.
  34. It is equally significant that Rajendra I respected this grant sufficiently to have it inscribed on copper-plates during his own reign, after his father's demise. For details, see ''The Larger Leiden Plates (of Rajaraja I),'' Epigraphia Indica, XXII (I933-34), pp. 2I3-66.
  35. See K. R. Venkatarama Ayyar, ''Medieval Trade, Craft and Merchant Guilds in South India,'' Journal of Indian History, XXV, 3 (Dec I947), pp 269-80); and K. Indrapala, Some Medieval Mer- cantile Communities' (n. 33 above).
  36. Epigraphia Zeylanica, III, 4 (I929) and V, i6 (I963); the quote is taken from the latter, which is a revised reading
  37. Ibid.
  38. The Loboe Toewa inscription bears a Saka date corresponding to io88, some 63 years after Ra- jendra's brief naval raid against Srivijaya. K.A. Nilakanta Sastri, A Tamil Merchant-Guild in Sumatra," Tijdschrift voor Indische Taal-, Land-, en Volkenkunde, I932, pp. 2-I
  39.  Epigraphia Indica, XVIII (I926), No. 38.
  40. S. Paranavitana, "Polonnaruva Inscription of Vijayabahu i," Epigraphia Indica, XVIII, I (I926), pp. 330-38.
  41. 42 Cv. 6o.35ff. 
  42. Indrapala, "South Indian Mercantile Commu- nities" (n. 33 above), p. 1I2
  43. Archaeological Survey of Ceylon, Report for I906, pp. I7ff; Arch. Survey of India, South Indian Inscriptions, IV (I923), Nos. 594-96, 598
  44. Wijetunga (n. 2 above), p. 74; South Indian Inscriptions, IV (I923), No. 1412.
  45. Cv. 58.iiff.
  46. Cv. 5 5. I9ff.
  47. I have adopted Geiger's dates here, although again it should be noted that the Chronicle's attribu- tion of twelve years may not be factual. (See n. 23 above.
  48. His military success no doubt served as veri- fication of appropriate ancestral credentials; his ge- nealogy is credulously recited in the Chronicle
  49. Cv. 58.I6-I7
  50. For a radically different interpretation of these conflicts, and indeed the entire period covered by this article, see Senarat Paranavitana, Ceylon and Malaysia (Colombo: Lake House Investments, I966). The stimulating but problematic hypotheses advanced in that work raise a number of technical questions that cannot be addressed in the short space of an article. I have therefore confined my present remarks to the exposition of an alternative model.
  51. K. A. Nilakanta Sastri, The Col.as, 2nd ed. (Madras: Univ. of Madras, I955), p. 321.