தமிழ் வெகுசன வரலாற்றுணர்வு என்பது தமிழ் இனவுணர்வின் தோற்றத்தோடு உருவான வரலாற்று நாவலாசிரியர்களால்
தமிழ்ப் பெருமிதங்களையும் வெற்றிகளையும் மையப்படுத்திக் பெரும்பாலும் கட்டியெழுப்பப்பட்டது.
இதனடிப்படையில் பிற்காலச் சோழப்பேரரசானது கேள்விக்கிடமற்ற பெருமித வரலாற்றுக் காலமாக
தமிழ் மனத்தில் படியவைக்கப்பட்டுள்ளது. அப்பேரரசால் வீழ்த்தப்பட்ட நாடுகளின் பதிவுகளில்
வாழ்கின்ற மக்களுக்கு அப்பேரரசு எவ்வாறாக இருந்தது என்பது பற்றிய அக்கறையை அது புறமொதுக்கிக்கொண்டது.

தோற்றுப் போனவர்களின் பதவிகளிலிருந்து வரலாற்றை முன்வைக்கும் முயற்சியை மேற்கொள்கிறது இக்கட்டுரை. அந்தவகையில் இதுவரையில் நிலைபெற்றுள்ள 11ஆம் நூற்றாண்டு தென்னிந்திய அரசியல் பொருளாதார
வரலாற்றில் மற்றொரு வரலாற்றை முன்வைக்கிறது. அக்காலத்தின் சோழ பேரரசின் எதிர்ப்பு காவியங்களாக்க
(epic of resistance) கருதக்கூடிய பௌத்த மத
பதிவுகளை முதன்மை கொண்டு இக்கட்டுரை இயங்குகின்றது. எவ்விதமான புனித அடையாளங்களோடு
படையெடுப்புகள் செய்யப்பட்டாலும் அதன் தவிர்க்க முடியாத பங்காக அழிவரசியல் உள்ளது என்பதைக்
கவனப்படுத்துவதுடன் போரில் தோற்கடிக்கப்பட்ட சமூகத்தின் வரலாறுகளைப் பேசுகின்ற இக்கட்டுரை
மூலம் தமிழ் மனதில் ஆழப்படிந்துள்ள வரலாற்றுணர்வில் கேள்விகளை எழுப்பி உரையாடுவதற்கான
வாய்ப்புகளை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பு.
நாற்பதாண்டுகளுக்கு
முன் எழுதப்பட்ட இக்கட்டுரையின் முன்வைப்புகள் முடிவுகள் இன்று மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட்டு
அவை தொடர்பில் வேறு முன்வைப்புகள் இப்போது புலமையாளர்களால் சான்றாதாரத்தோடு முன்வைக்கப்பட்டுள்ளன.
மறைந்த பேராசிரியர் நொபுரு கரோஷிமா, பேராசிரியர் வை.சுப்ராயுலு உள்ளிட்ட தலைசிறந்த
வரலாற்றாசிரியர்கள் சோழர்கால வரலாற்றை தற்போது மிக வெளிச்சமாக்கியுள்ளனர். சிங்கள பௌத்த
இனவாத சிந்தனையோடு வடகிழக்கில் காணப்பட்ட வரலாற்றுச் சான்றுகளை புறமொதுக்கி இலங்கை
வரலாற்றாசிரியர்களால் கட்டியெழுப்பட்ட வரலாற்று எழுதுகையின் செல்வாக்கு இலங்கையிலிருந்து
ஆய்வு செய்த வெளிநாட்டு ஆய்வாளர்களிலும் உண்டு என்பதையும், இக்கட்டுரை வெளிவந்த பின்
இலங்கையில் கிடைத்த பெருமளவு சோழ வரலாற்றுச் சாசனங்கள் ஈழத்தின் சோழ ஆட்சி பற்றிய இக்கட்டுரைக்கு
மாறானதும் விரிவானதுமான பார்வைகளை முன்வைக்கின்றன என்பதையும் இக்கட்டுரையை வாசிக்கும்
போது கவனத்தில் கொள்ளவேண்டும் என்று 'புதிய சொல்'லின் வெளியீட்டுக் குறிப்பு சொல்கிறது
The
Journal of Asian Studies, Vol. 35, No. 3 (May, 1976) இல்
இக்கட்டுரையின் மூலவடிவம் The
Politics of Plunder: The Cholas in Eleventh-Century Ceylon எனும் தலைப்பில் வெளிவந்தது.
இக்கட்டுரையின் உள்ளடக்க விடயங்கள் பின்னர் The
Politics of Expansion: The Chola Conquest of
Sri Lanka and Sri Vijaya நூலில் 4வது அத்தியாயமாக
The Cholas In Ceylon
(பக்.46–65)
என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
George Woolley
Spencer -
Northern Illinois பல்ககைலக்கழகத்தின்
வரலாற்றுத்துறையில்
பணியாற்றியவர்.
பத்தாம்
பதினொராம்
நூற்றாண்டு
தென்னாசியாவில்
சோழர்களின்
ஏகாதிபத்தியம்
மற்றும் சோழ கடற்படை நடைவடிக்கைள்
தொடர்பாக
விரிவாக
ஆராய்ந்தவராவார்.
Royal Leadership and
Imperial Conquest in Medieval South India: The Naval Expedition of
Rajendra Chola I, C. 1025 A.D. (University
of California, Berkeley, 1967), The Politics of Expansion: The Chola Conquest of Sri Lanka and Sri Vijaya (New Era Publications, Madras, 1983.), Temples,
kings, and peasants: perceptions of South India's past ( (New Era
Publications, Madras, 1987.) என்பன அவரது குறிப்பிடத்துக்க
முக்கிய நூல்களாகும்.
தேவா.
‘குழந்தைப் போராளி’, ‘அனொனிமா’, ‘அம்பரய’ 'என் பெயர் விக்டோரியா' ஆகிய நூல்களை மொழிபெயர்த்த
சுயாதீன மொழிபெயர்ப்பாளாவார். புதிய சிந்தனைகளையும் உரையாடல்களையும் தமிழ்ச் சூழலுக்குள்
அறிடமுகப்படுத்தும் நோக்கில் மொழிபெயர்ப்புச் செயற்பாட்டை மேற்கொள்பவர்.
கொஞ்சம் பெரிய அக்கட்டுரையை இரு பகுதிகளாக இங்கு புதிய சொல்லுக்கு நன்றியுடன் பகிர்கிறேன்
மரபு வழி முடியாட்சி இராட்சியங்கள் எதிரிகளால் கொள்ளையிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்ததால் வரிவருமானத்தை கொடுக்கும் நிலப்பரப்பினுள் “எதிரிகள்’ அத்துமீறி நுழையாமல் பாதுகாக்க வேண்டும். ஒழுங்கமைவு பெறாத ஆட்சி நிலப்பரப்பு கறாரான எல்லை நிர்ணயமில்லாமை இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சிக்கல் நிறைந்ததாகவே இருந்தது. தெளிவற்ற எல்லைகள் அடர்ந்த வனங்களினருகே ஆங்காங்கே துப்பரவு செய்து விவசாயிகள் குடியேறிய சிறுசிறு நிலங்கள் எனச்சோழ அரசர்களின் ஆட்சி நிலமிருந்ததால் பாதுகாப்பு அவர்களின் முதன்மைத் தேவையாகவும் பெருஞ்சுமையாகவும் இருந்தது. பாதுகாப்பின் பயச்சிக்கல்களுடன் சேர்த்தியாக உள்நாட்டுப் பாதுகாப்பிற்குச் சவாலாக இருந்தது பெரிய படையெடுப்புகள் அல்லாது ஆநிரை கவர்தலே – குறிப்பாக தனி அலகுகளாக அல்லது பெரிய மேலாட்சி அதிகாரங்களின் கீழ் சிறிதளவு கட்டுப்பாடுகளுடன் வனவீதிகளில் வாழ்ந்துவரும் ஆதிக்குடிகளினால் மேற்கொள்ளப்படும் வளர்ப்பு மிருகங்களைக் கைப்பற்றல். நாளாந்தப் பாதுகாப்பு ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவத்தாலே அல்லது பொலிசாராலோ அல்லாது அந்தக் குழுமத்தின் தலைவர் அல்லது அங்கு குடியிருக்கும் மக்களாலேயே மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாகச் சோழ மையநிலப்பரப்பிலிருந்து வெகுதூரம் விலகியிருப்பவர்களே இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாதுகாப்புப்போல் பலவேறு விடயங்களில் இச்சிறு குடியேற்றங்கள் தங்களில் தாங்களே தங்கியிருந்தனர் (ஆயினும் முழுமையான தன்னாட்சி என்று கொள்ள முடியாது). ஆநிரை கவர்வோரிற்கு எதிரான பாதுகாப்புச் செலவை முடி கோராதிருக்கத் தங்களை இவர்கள் ஒன்றிணைத்துச் செயல்பட்டாலும் அரசின் வரிகோரலை முற்றாக இல்லாது செய்யவும் அதேபோல் கால்நடைகளின் கொள்ளையை முழுமையாகத் தடுக்கவும் இவர்களால் இயலவில்லை.4
புனித சின்னங்கள்கூடச் சோழச் சூறையாடல்களுக்குத் தப்பவில்லை. ஒவ்வொரு விகாரையிலும் பெரியதொரு தூபா (சமஸ்கிரதத்தில் ஸ்தூபா) இருக்கும். மத்திய பீடத்தில் புனித சின்ன அறைக்கு மேலாகப் பிரமாண்டமாக எழுப்பப்பட்ட கோபுரமே இவ்வாறு அழைக்கப்படுகின்றது. மகா விகாரையில் தூபா பிரம்மாண்டமாகவிருக்கும் இவை கிறிஸ்துவிற்கு முன்னர் முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகப் புகழ் பெற்றவை. அரசன் துட்டகாமினி இவற்றைக் கட்டியதாகவும் மகாவம்சத்தில் இதன் நிர்மாணம், புனித சின்னங்களை பிரதிஸ்டை செய்ததுபற்றி மூன்று அத்தியாயங்களில் விபரமாக எழுதப்பட்டிருக்கின்றது
(29-31). சோழர்கள் விகாரையைத் தரைமட்டமாக்கியதுமல்லாமல் புனித சின்னம் பிரதிஸ்டை செய்யப்பட்ட பீடத்தின் கட்டுமானத்தையும் உடைத்துப் புதையல் தேடியிருக்கின்றார்கள்.
கொஞ்சம் பெரிய அக்கட்டுரையை இரு பகுதிகளாக இங்கு புதிய சொல்லுக்கு நன்றியுடன் பகிர்கிறேன்
கொள்ளை அரசியல்
பதினோராம் நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள்
ஆங்கில மூலக்கட்டுரை : GEORGE W.
SPENCER
தமிழில் : தேவா
* You
delight in looting the enemy's country by the light of the destructive fires
which you have started. Because of your plunder, the enemy's land is deprived
of all good things.
Poet’s praise of Karikala
Chola
இந்தியாவில் ஏற்பட்டுவந்த அரசியல், கலாச்சார வளர்ச்சி மாற்றங்கள், இலங்கையில் வாழ்ந்தவர் மத்தியில் பலநூற்றாண்டு காலமாக
பெரும் செல்வாக்கைச் செலுத்தி வந்திருந்தன. ஆயினும் அவற்றின் தாக்கங்கள் பெரும்பாலும் முரண்பாடுகளையும் முரண் நகையான
தன்மைகளையும் கொண்டவையாகவே இருந்து வந்துள்ளன. ஆயினும் இலங்கைக்குப் பௌத்த மதத்தை அனுப்பிவைத்த ஒரு
தேசமே , அந்த
நாட்டினுள் அத்துமீறி நுழைந்து பௌத்த ஞாபகச்சின்னங்களைக்
கொள்ளையடிக்கவெனவும்
ஆட்களை அனுப்பிவைத்தது; இலங்கை அரசர்களால் தமது அரசபடைகளைப் பலப்படுத்தவென சேவையில் அமர்த்தப்பட்ட இந்தியக் கூலிப் படைகளே, கட்டுக்கடங்காதவையாகவும், இலங்கை அரசுகளின் உறுதியான நிலைகொள்ளலுக்குப் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்துபவையாகவும் இருந்தன. இந்தியாவின் இலங்கைக்கான கலாச்சாரப் பங்களிப்பு மிகப் பரவலாக அறியப்பட்து.. இதுபற்றிய ஆய்வுகளை இந்திய, இலங்கை மற்றும் மேற்கத்திய அறிஞர்கள் மிக விரிவாக ஆராய்ந்திருக்கின்றனர். இந்த ஆய்வின் நோக்கம், பதினோராம் நூற்றாண்டு காலப்பகுதியில் இந்திய இலங்கை உறவுகளில் நிலவிய மிக
மோசமான உராய்வுத்தன்மையை கொண்டிருந்த பக்கத்தைப் பரிசீலிப்பதேயாகும். இந்தக் காலப்பகுதியில் தான் தென்னிந்திய சோழப்பேரரசின் அரசர்கள் எல்லைமீறி இலங்கையைக் கொள்ளையடிக்கவும் ஆக்கிரமிக்கவும் என தமது இராணுவத்தை அனுப்பி வந்தனர். இந்த ஆய்வு , இதுவரை கால வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொண்டுள்ள கருத்துகளுக்கு மாறாக, மரபார்ந்த இந்திய அரச ஆட்சியில், ஒழுங்கமைக்கப்பட்ட
கொள்ளை நடவடிக்கைகள் ஒரு மிக முக்கியமான அரசியல்- பொருளாதார சாதனமாக இருந்துவந்துள்ளன
என்பதை முன்வைப்பதையும் ஒரு
பொது நோக்காக கொண்தாக
அமையும்.
இலங்கையில் சோழர்களின் நிலைகொள்ளல் தொடர்பான முந்தைய அறிஞர்களது உரையாடல்கள் பெரும்பாலும் அதை ஒரு ஆட்சிமுறை நிர்வாக வரலாற்றுப் பிரச்சினை என்ற அடிப்படையிலமைந்த விவாதங்களாகவே அமைந்திருந்தன. இந்த அறிஞர்கள், சோழர்கள் வட இலங்கையை ஆக்கிரமித்திருந்தபோது, இந்தியாவில் அவர்களது ஆட்சியிலிருந்தது போன்ற நிர்வாக முறைமையிலேயே அதையும் “நிர்வகித்தனர்” என ஆராயாது பொதுப்படையான ஒரு அனுமானத்தைக் கருத்தில் கொண்டிருந்தனர். ஆனால், உண்மையில் செய்யப்பட்டிருக்க வேண்டியது என்னவெனில், அந்த அரசின் ஆட்சிக் கட்டுமானம் பற்றிய – குறிப்பாக, நடைமுறையிலிருந்த நிர்வாக அதிகாரிகளை அடையாளம் காணல், அவர்களின் பதவிநிலைப் பட்டங்களை ஆராய்வது, அவர்கள் எந்தெந்த இலாக்காக்களை நிர்வகித்தார்கள் என ஊகம் செய்தல்.1 1 என்பதனூடக செய்யப்படும்- ஒரு ஆய்வே. இதற்கு மாற்றாக நாம் இங்கு முன்வைக்கும் விவாதம் சோழர்களின் “நிர்வாகம்” –குறிப்பாக இராச்சியத்தின் புறஎல்லைகளில் – மிகக்குறைந்த அளவிலேயே நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதும் அது எல்லை விரிவாக்கம், புதிய நிலப்பரப்புகளை வெல்லல், ஆட்சியை நிலைப்படுத்தல், அதன் பின்னாலான வருவாய் என்ற சிக்கலான நடைமுறையை விட, அவர்களது எல்லை விரிவாக்கம் உடனடியான கொள்ளை வருவாயையே முதன்மை விருப்பாகக் கொண்டிருந்து என்பதாகும்..
பத்தாம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும் பதினொன்றின் ஆரம்பத்திலும் தென்னிந்தியா மற்றும் கிழக்கிந்தியா மீதான சோழர்களின் பிரமாண்டமான படையெடுப்புக்கள் உண்மையிலேயே கொள்ளைக்கான படைநடத்தல்களே. சோழர்களின் இலங்கை மலாக்கா கடல்வழி - ஶ்ரீவிஜய மீதான – தாக்குதல்கள் என்பன சமகாலத்தில் மேற்கொள்ளப்பட்டதால் இந்தியாவில் தொடர் கொள்ளை நடவடிக்கைகளின் நீட்டமாகவே இதனைப்பார்க்கவேண்டும். வரலாற்றியலாளர்கள் சோழர்கள் கொள்ளையிடுதலை மேல்வரிச் சட்டமாகப் பின்பற்றினர் என்பதைக் கண்டுகொள்வதில் மெத்தனப்போக்கையே கடைப்பிடித்தனர். போர் வெற்றிகள் பொறிக்கப்பட்ட எழுத்துமூலங்கள் மரபுரீதியான மொழியில் எழுதப்பட்டிருந்தமையும் இதற்கு ஒரு காரணமாகக் கொள்ளவேண்டும். இந்த அலங்கார மொழி மயக்கத்தினை ஊடுருவத் தாக்குதலுக்குள்ளான நிலப்பரப்பிலிருந்து சமகால மரபுரீதியான ஒப்பீட்டளவில் மாறுபாடான ஆவணங்கள் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.2 இலங்கையில் சோழர்களின் திடீர் தண்டெழுச்சிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதன் காரணம் சோழ இராணுவ விரிவாக்கம் பற்றிய ஏராளமான குறிப்புக்கள் சூளவம்சத்தில் கிடைப்பதுடன் சோழப் புலவர்களின் புகழாரங்களையும் அவை கேள்விக்குள்ளாக்குகின்றன எம்பதே. அத்துடனல்லாது அது சிங்கள மக்கள் அனுபவித்த பாடுகள் பற்றிய தெளிவான விவாதத்தையும் முன்வைக்கின்றது. (தேரவாத பௌத்த அடிப்படைக்கருத்தாகவும் இது இருக்க வாய்ப்புண்டு) இந்திய மூலங்களோ அரசின் வீரதீரப் புகழ்பாடுதலையே பதிவு செய்துள்ளன.
சோழப் படையெடுப்புக்கள் ஒரு பொருளாதார நடவடிக்கை
சோழ அரசர்கள் தங்கள் பிரதான படை நடத்து முறையாக நீண்டதூர கொள்ளை, சூறையாடலைக் கைக்கொண்டனர் என்பதை நம் விவாதத்தின் நுளைவு வாசகமாகக் கொள்வோம். இந்தக் கொள்ளை, சூறையாடல்களை அவர்கள் இரட்டைப் போர்த் தந்திரமாகக் கையாண்டனர்.
(I) இடையறாது தொடரும் வழிமுறைகளில் அரச கஜானாவைப் பெருக்குதல் (2) குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவிற்கு பல்வகைத் தன்மைகளைக் கொண்ட மூலங்களைக் கொண்டதாக இருந்த சமூக அரசியல் அமைப்பினை ஒரு அமைப்பின் கீழான முடி ஒருங்கிணைப்பாளராகவும் மேலாட்சியாளராகவும் தன்னைக் கொண்ட அமைப்பு முறையாக- அதாவது ஒரு ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக- நிலை நிறுத்தும் வாய்ப்புக்களை உருவாக்கல்.3 அரசின் வளங்களைத் திரட்டும் அமைப்பு வடிவின் ஒரு பகுதியாகவே பிராந்தியங்களுக்களிடமிருந்து வருவாய் திரட்டும் வரைமுறையிலிருந்துதான் இந்த ஆய்வுத்தரவு வாசகம் உய்த்துணரப்பட்டது. . அரசின் மைய நிலத்திலிருந்து நீண்ட தூரம் விலகியிருக்கும் வெளிப்பிராந்தியங்களிடமிருந்து வருவாய் திரட்டும் இந்தப் பிராந்திய மாதிரியில், நாட்டின் மைய நிலப்பரப்பைவிட அதன் தொலைதூர பிராந்தியங்களின் மீதான கட்டுப்பாட்டு வரையறைகள் குறைந்தளவாக இருக்கும் அதேவேளை, அதிகளவு வன்முறையுடன் கூடிய வரித்தண்டலைக் கொண்தாகவும் இருக்கும். அரசின் மைய நிலப்பகுதிகளில் வரையறுக்கப்பட்ட பணத்தண்டல் “வரிவிதிப்பு” (நிலம், உற்பத்தி, விளைபொருட்கள் அல்லது மக்கள் தொகை கணக்கிட்டு வசூலிக்கப்படுவது) மற்றயது “திறை” (நேரடியானதல்ல, குறுநில மன்னர்கள், இடைநிலை அதிகாரிகளிடம் அவர்களின் இராணுவ பலத்தின் அடிப்படையில் தண்டல் செய்வது) என்பவை நடைமுறையில் இருந்தன. வசதிக்காகவும் சிக்கலான சோழர்களின் வருவாய்த்துறை பற்றிய விவாதத்தைத் தவிர்த்துக் கொள்வதற்காகவும், நான் இங்கு வரையறுக்கப்பட்ட தண்டல்களை – வரி, திறை – இவை இரண்டையும் இணைத்துக் ‘கொள்ளை’யிலிருந்து பிரித்துக்காட்ட முயல்கின்றேன். இவ்வித்தில் இவற்றைவிட, “கொள்ளை”யிலேயே நான் அதிக கவனம் செலுத்துவதே இதன் காரணம் ஆகும். எப்படியாயினும் கறாராக நாம் பார்ப்போமாயின் இவை எல்லாவற்றையும் வரித்தண்டல் தொடர்பாகவே பார்க்க வேண்டும். இதனில் வரிவிதிப்பு முடியின் அதிகாரம் வலுவாக உள்ள இடங்களிலும் திறை குறுநில மன்னர்கள், பிராந்திய ஆட்சி அதிகாரமுள்ள இனக்குழுத் தலைமகளிடமிருந்தும் கிரமமாக வசூலிக்கப்படும். கொள்ளைக் கிரமமற்ற முறையில் முடியின் அதிகார மைய நிலத்திலல்லாது தூர நிலப்பகுதிகளிலும் நடாத்தப்படும். வரிவிதிப்பு அதிமுக்கியமான அரச வருவாயாகவும் கொள்ளை அந்நதளவு முக்கியமற்றதாகவும் (அது மரபு மீறியதாகவும்) மரபு ரீதியான பார்வை ஒன்று உண்டு. இன்றைய பகுப்பாய்வுகள் சோழ சமூக இராணுவ கட்டுமானத்தைப் புரிந்துகொள்ள வரி, வருமான வசூலிப்பில் எதில் சோழர்கள் அதிக கவனம் செலுத்தினார்கள் என்பதையும் எதற்கு அதிக முன்னுரிமை கொடுத்தார்கள் என்ற பட்டியலை ஊகமுறையில் தலைகீழாகப் பார்ப்பதன் மூலமே சோழக்கட்டுமானத்தின் இயங்கு தன்மையை - அதன் நீட்சியாக மற்றும் பல இந்திய, இந்தியா அல்லாத முடி ஆட்சிகளினைப் புரிந்துகொள்ள முடியும்.
அரசர்கள் இந்நிலையால் கையறுநிலைக்கு உள்ளானார்கள். காட்டை அழித்துப் புதுக்குடியேற்றங்களை உருவாக்குவதற்கும் ஆட்சி நிலப்பரப்பிற்குத் தொடர்பில்லாத இடங்களில் கொலணிகளை உருவாக்குவதற்குமான முடிப்படைப்பாதுகாப்பு உள்நாட்டு வரிவிதிப்பு நிலப்பரப்பை அகலப்படுத்துவதே நோக்கம் ஆயினும் தொலைதூர நிலங்களில் முடிப்படையினர் கொலணிகளை உருவாக்க நிலைகொண்ருக்கும்போது உள்ளுரில் சிறுதலைமைகளும் கூட்டு முயல்வில் வெவ்வேறு குழுக்களும் தான்தோன்றித்தனமாக முடிக்கெதிராகக் கிளர்ந்தெழும் வாய்ப்பையும் உருவாக்கும். பிராமண அதிகாரத்திற்குட்பட்ட கிராமக் குழுமங்களை அமைக்கச் சோழ அரசு தீவிர ஆதரவை அளித்தது. இது ‘பிரம்மதேயமென’ பிற்காலத்தில் வெகுவாக அறியப்பட்டது. இந்தப் பிராமணத் தலைமைக் குடியிருப்புகளை உருவாக்கத்தின் பகுதிக் காரணமாக உள்நாட்டின் இராணுவ ரீதியல்லாது பொருது படைவீரர்களின் உருவாக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதென்பதும் அடங்கும். இதனூடு உள்நாட்டு சிறுதலைமைகளின் முடிக்கெதிரான கிளர்ச்சியில் அரியணையைக் கைப்பற்றும் முயல்வும் மட்டுப்படுத்தப்படும். அப்படியிருந்தும் மிக வலிமையான சோழ அரசர்களின் ஆட்சியிற் கூட அவர்கள் இராச்சியத்தின் எல்லைப் பிரதேசங்கள் குறுநில மன்னர்கள், இனக் குழுத்தலைவர்கள் அதிகாரத்தின் கீழ்த்தான் இரந்தன. அவர்களுக்கும் சோழ அரசர்களுக்குமான மரியாதை நிமித்தமான உறவுகளும் பெரியளவில் இருக்கவில்லை.. இவர்களின் ஆடம்பர வாழ்விற்கான முன்னுதாரணமாக அரசர்களையே எடுத்துக்கொண்டிருந்ததால் அரசர்கள் நடாத்தும் போர்களில் பங்கேற்று அதில் கிடைக்கும் இலாபத்தில் பங்குபெறுவதற்காகவே இந்த குறைந்தளவு உறவைப்பேணினர்.
கிராமத் தலைமை, கிராமங்கள், ஏனைய உள்ளுர் அமைப்புகள், பலதரப்பட்ட காரணிகளை முன்திட்டமிட்டு தங்கள் வருவாயைத் தாங்களே வைத்துக்கொள்ள இதில் பெரிதாக ஆச்சரியப்படாத முடி அரசு இதனை ஈடுகட்ட ‘எதிரி நாடுகளில்’ நெடுந்தூரக் கொள்ளைகளில் (உதாரணமாக மற்றைய முடியாட்சி இராச்சியங்களில்) ஈடுபட்டனர். இக்கொள்ளைகளின் மூலம் உபரி வருமானமாகக் கால்நடைகள் ஆபரணங்கள் மற்றும் காவிச்செல்லக்கூடிய செல்வங்களை எடுத்துவந்தனர். கொள்ளையிட்ட பொருட்களில் சிலவும் கால்நடைகள் பணம் என்பன கிராமங்களில் தனியாருக்கோ அல்லது கிராம நிர்வாகத்திற்கோ, கோவில்களுக்கான இடையறாத சேவையை உறுதிப்படுத்தப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன.5 அரசவைப் பிராமணர் கொன்றிரை கொள்கின்ற இந்த நிகழ்வுகளுக்குப் பக்கபலமாக நுண்ணிய சடங்காசாரங்களையும் அலங்காரப் பேச்சுக்களையும் அரங்கேற்றித் தங்கள் உதவியை அரசிற்குப் பிரகடனப்படுத்தினர். இதற்கான முதற்சான்றுகள் ஆரம்ப வேதகாலங்களிலேயே போதியளவு உள்ளன.6 தூரதேசங்களில் வலிந்து போர்களை நடாத்துதல் அந்நாட்டுச் செல்வங்களைச் சூறையாடவும் அதேவேளை அரசர்களும் அவர்கள் அடிவருடிகளும் சமூகத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட பாதுகாவலன், கொடைவள்ளல் எனும் நிலைகளைத் தக்க வைத்துக்கொள்ளவும் உதவியது
இலங்கையும் தென்னிந்திய அரசியலும்
சோழர்களின் எழுச்சிக்காலமான ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியகாலத்திற்கு முன்பே இலங்கையின் அரசர்களும் தென்னிந்திய முடிதாங்கிகளும் ஒருவரது அரசியல் செயற்பாடுகளில் மற்றையவர் உள்ளிழுத்துக்கொள்ளப்பட்டனர். நூற்றாண்டின் முதற்பாகத்தில் இலங்கை அரசர்கள் தங்கள் அருகாமையிலுள்ள
பாண்டிய அரசர்களின் பயமுறுத்தல்களால் பல்லவ அரசுடன் கட்டிறுக்கமற்ற தளர்வானதொரு உறவைப் பேணிவந்தனர்.
பல்லவர்காலத்தில் இலங்கையின் வடபகுதியில் சில தென்னிந்தியக் கொலணிகள் இருந்திருக்க வாய்ப்புண்டு. மகாவம்சம் தமிழ்க் குடியேற்றங்கள் ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் நடந்தேறியதாகக் குறிப்பிடுகிறது. அத்துடன் பாண்டிய படையெடுப்பு நெருக்கடி காலங்களில் ஒருவகையில் ஐந்தாம் படையாக ஆக்கிரமிப்புப் பாண்டியர்களுடன் இணைந்து சிங்களவர்களுக்கு எதிராக போரிடுவர் எனவும் குறிப்பிடுகிறது.7
இவ்வாறான ஒரு நெருக்கடி அரசன் 'முதலாம் சேன' (833–851)
ஆட்சியில் பாண்டிய அரசன் ஶ்ரீமாற ஶ்ரீ வல்லபனின் படைகள் இலங்கையில் தரையிறங்கிய போது உருவானது. உள்ளுர் தமிழர்கள் ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்து தலைநகர் அநுராதபுரத்தைக் கைப்பற்றப் போராடினர். அதன் விளைவுகளை மகாவம்சம் பதிவு செய்கின்றது.
'பாண்டு அரசன் அரச கஜானாவிலிருந்த பெறுமதியான பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டான். விகாரைகளிலும் நகரத்திலும் கொள்ளையிட என்ன கிடைத்ததோ அவற்றை எல்லாம் கொள்ளையிட்டான் 'ரட்ணபசடாவிலில்' இருந்த பொன்னாலான ஆசான் (புத்தர்) உருவம், அறிவின் குமரனின் உருவத்தில் கண்களாகப் பதித்திருந்த ஆபரணக்கற்கள், அதேபோல் தூபறாமையின் தங்கத்தகடுகள் மற்றும் பொன் உருவங்களை ஆங்காங்கே அமைந்திருந்த விகாரைகளிலிருந்தும் சூறையாடிச் சென்றனர். இவை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு இலங்கைத்தீவை அதன் செல்வங்களை தனதாக்கி வெறுமையாக்கி அழகிய நகரை யக்காக்கள் சூறையாடியது போல் அலங்கோலமாக விட்டுச்சென்றனர்' 8
ஆனால் அடுத்து வந்த இலங்கை அரசன் இரண்டாம் சேனன் (851-855) பதிலடியாகத் தலை நிலப்பரப்பை முற்றுகையிட்டு பல்லவனின் துணையுடன் பாண்டியத் தலைநகரம் மதுரையைக் கைப்பற்றினான்.
பாண்டிய அரசனின் முடிகளைந்து அவனை எதிர்த்த பாண்டிய மன்னனின் மகனை அரியனை ஏற்றினான். இராணுவம் பெருந்தொகைச் செல்வங்களைக் கைப்பற்றியது.
முன்னர் இலங்கையிலிருந்து எடுத்துவரப்பட்ட பொருட்களும் இதனுள் அடக்கம்.9 எனவே சோழர்களின் முற்றுகைக் காலமான பத்தாம் பதினொராம் நூற்றாண்டுகளுக்கு முன்பே இலங்கை அரசர்கள் தென்னிந்திய மரபு வழி அரசாட்சி அரசியலிலும்,
இராணுவ நடவடிக்கைகளிலும் கொள்ளையிடுவோராகளாகவும் கொள்ளையிடப்படுவோர்களுமாகச் சிக்கிக்கொண்டனர்.
இந்திய அயலவர் போர் முனைப்புடையவர்களாக இருந்தபோது பயத்துடனும் அவர்கள் அரசுகள் பலவீனமான போது தலையிடுவதென்ற ஊசலாட்டமான கொள்கையையே இலங்கை தன் கொள்கையாகக் கடைப்பிடித்து வந்தது.
சோழ அரசின் எழுச்சி இலங்கையின் ராஜதந்திரத்தில் ஒரு புரட்சியையே உருவாக்கியது.
தென்னிந்திய அரசுகளுடனான உறவில் இதுவரை இல்லாதவாறான மாற்றங்கள் நடந்தேறின.
கோழ அரசின் எழுச்சி பல்லவர்களை வென்ற காவேரிக் கழிமுகத்தினூடு தென்பகுதிக்குள் பாண்டிய இராச்சியத்தை நெருங்கியது.
இலங்கை அரசர்களுக்குப் பல்லவ உதவி இல்லாதுபோயிற்று.
இதனால் பாண்டியர்களைவிடத் தற்போது சோழர்களே பெரிய நெருக்குவாரமாக இலங்கை அரசர்கள் பார்த்தார்கள். பாண்டியர்களின் அரசு வலிமை இழந்ததாக இருந்தது. தங்கள் இராச்சியத்தைத் தக்க வைத்துக்கொள்ள அவர்களுக்கே இப்போது உதவிதேவை. தென்னகத்தின் கடைக்கோடியின் செழிப்பான வளங்கள் சோழர்களின் கவனத்தைக் கவரும். மன்னார் வளைகுடாவின் முத்துப்படுக்கைகள் பாண்டியர்கள் வசமிருந்தது. அதற்கு அப்பால் இலங்கைச் சரித்தின் ஆரம்ப காலத்திலிருந்தே விலைமதிப்புள்ள ஆபரணக் கற்களுக்கு பெயர்போனது.
இவை இரண்டுமே சோழர்களிற்கு ஆவலைத் தூண்டப் போதுமானது.10 சோழ நெருக்கடியில் இலங்கை பாண்டியப் பகைமை விலகி கூட்டுச்சேரத் தேவை ஏற்பட்டது.
915 இல் இலங்கைப் படைகள் இரண்டாம் இராஜசிம்மனுக்கு உதவச் சென்றன சோழ அரசன் முதலாம் பராந்தகன்
(907 - 955) படைகளிடம் இராஜசிம்மனின் கூட்டுப்படை படுமோசமான தோல்வியைச் சந்தித்தது. இழப்பை ஈடுகட்ட முடியாத இராஜசிம்மன் அரசுரிமை சின்னங்களுடன் நான்காம் டப்புலவின்
(907-955)11 ஆட்சிக்காலத்தில் இலங்கைக்குத் தப்பியோடினான். இலங்கை அரசமாளிகையில் தஞ்சம் புகுந்த இராஜசிம்மன் அநுராதபுர அரசமாளிகையின் தன்னலக் கும்பல் அரசியலுக்குப் பலியாகியதன் காரணத்தால் தான் அவசரவசரமாக தன் அரசுரிமைச் சின்னங்களையும் விட்டுவிட்டு கேரளாவிற்குப் போனான்.12
இராஜசிம்மனை இழிவுபடுத்தியது சோழர்களின் முழு வெற்றியாகிவிடவில்லை. முழுமைபெறாத பாண்டிய வெற்றி வட இலங்கையில் அவர்கள் வலிமையை நிரூபிக்கத் தூண்டியது.
மகாவம்சத்தின் படி பாண்டிய மண்டலத்தில்தான் வெற்றியை உறுதிசெய்ய பராந்தகன் தானே முடிசூடிக்கொள்ள ஆவலாக இருந்தும் முடிசூட்டு விழாவில் பயன்படுத்தப்படும் பாண்டிய அரசுரிமைச் சின்னங்கள் இல்லாதபடியால் முறையான முடிசூட்டு விழாவை நடாத்தவில்லை. இலங்கை அரசன் உதயன் (940-953) பாண்டிய அரசகுலச் சின்னங்களைத் திருப்பித்தர மறுக்க அதனையே இலங்கைமீது போர்ப்பிரகடனம் செய்யப் பராந்தகன் காரணமாக மாற்றிக்கொண்டான்.
உதயனின் படைகளை வென்று கொள்ளைகளிலும் பராந்தகன் படை ஈடுபட்டது.
உதயன் அடர்ந்த றோகணப்பகுதிக்கு பாண்டிய அரச சின்னங்களுடன் பின்வாங்கினான்.ஏமாற்றமடைந்த சோழர்படை அரச சின்னங்களின்றி வெறுங்கையுடனே இந்தியா திரும்பியது.
போதியளவு கொள்ளைச் செல்வங்களைச் சோழர்படை எடுத்துச்சென்றிருந்த போதிலும் இந்தியப் பெருநிலப்பரப்பின் மீதான பதில் போரின்போது பெருமளவு செல்வம் மீட்கப்பட்டதென்றும் மகாவம்சம் பதிவு செய்துள்ளது.13
சோழர்கள் பாண்டிய மண்டலத்தில் முகங்கொடுத்த பிரச்சினைகளில் அரச சின்னப்பிரச்சினை ஒரு நேரறிகுறியே. அந்தப் பிராந்தியம் கடக்குமுடக்கான கடந்து செல்லும் பிரதேசம், காவேரிக் கழிமுகத்திற்கு அருகாமையிலிருப்பதால் உள்ளுர் தாக்தகுலுக்கு வாய்ப்பாக இருந்தது. அதேவேளை ஒன்றிணைந்த பாதுகாப்பிற்கு சோழ அரண்மனையின் அடிப்படை நிர்வாக அலகுகள் விலகித் தூரத்தில் இருந்ததும் காரணம். இராச்சியத்தின் தூரத் தென்பகுதியில் வேளான்குடியேற்றங்கள் முழுமையான கட்டுக்கோப்பினுள் இல்லாதிருந்ததுடன் அவர்களை அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவது சிக்கலாகவே இருந்ததது.
நீண்டு செல்லும் காட்டுப்பாதைகள் உள்ளுர் எதிர்ப்புத் தலைமைகளுக்கும் பொருது படையினருக்கும் வசதியான மறைவிடங்கள். இவை அனைத்தும் பாதுகாப்பிற்கு எதிரான பெரும் சவால்கள். சோழர்கள் பல்லவர்களை அடக்கியது போல் முழுமையாகப் பாண்டியர்களை அடக்க முடியவில்லை. தென்னகத்தில் படைமுகாம்களை தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய தேவையும் இருந்தது. அதுவும் சோழ இளவரசர்கள் கட்டளைத் தளபதிகளாக இருக்க வேண்டிய தேவையும் இருந்தது. சோழ இராட்சியத்தின் தென்புற எல்லை வடஇலங்கைக்கு மிக அண்மையில் இருந்ததும்,
தோற்கடிக்கப்பட்ட எதிரிகள் தஞ்சம்புக பாதுகாப்பாக இருந்தமையும் பெருநிலப்பரப்பைத் தாக்க வாய்ப்பான இராணுவத் தளமாகவுமிருந்தது. ஏனெனில் வடஇலங்கை மீது படையெடுப்பின் பாண்டிய இராச்சியத்தில் முகங்கொடுத்தளவு எதிர்ப்பை அவர்கள் சந்திக்க நேரும் அத்துடன் தென்னிலங்கையின் அரசியல் மாற்றங்களையும் சமாளிக்க வேண்டிவரும்.
பத்தாம் நூற்றாண்டின் மத்திய காலம்வரை இலங்கை மீதான தென்னிந்தியப் படையெடுப்புகள் குறுகிய கால எல்லைக்குட்பட்டதாகவே இருந்தன
– குறைந்த முயல்வில் உடனடி இலாபம் எனும் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு வேலை முடிந்ததும் பெருநிலப்பரப்பிற்கு திரும்பிவிடுவார்கள்.
ஆனால் வலிந்து போர்களைத் தொடங்கும் பேராவல் கொண்ட சோழ அரசர்கள் முதலாம் ராஜராஜன் (985-1014) முதலாம் ராஜேந்திரன் (1012-1044) புதிய போர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்தினர்.
முன்னையவற்றைவிட ஈவிரக்கமற்ற கொள்ளைகள்,
வடஇலங்கையின் அரசியல், சமயக் கேந்திரங்களை நிர்மூலமாக்கல். அதனைத் தொடர்ந்து தீவின் ஏனைய பாகங்களின் தொலைதூரக் கொள்ளைகளை மேற்கொள்ள வசதியாக நிரந்தரமாக இல்லாவிடினும் நீண்டகாலத் தங்கலுக்கு பலத்த பாதுகாவலுடனான இராணுவப் பாசறைகளை அமைத்தனர்.
வலிந்த சோழ இராணுவ முற்றுகை வடஇலங்கையில் முக்கால் நூற்றாண்டாகத் தொடர்ந்தது. அண்ணளவாக 993 (ராஜராஜனின் முதலாம் நுழைவு)14 தொடங்கி முதலாம் விஜயபாகு
1070 இல் மீளவும் வடக்கைக் கைப்பற்றி சோழர்களை வெளியேற்றும்வரை தொடர்ந்தது.
இந்தியாவின் முடி ஆட்சி இராட்சியங்களில் நடைபெறுவது போலவே அநுராதபுர அரசின் உட்பூசல்கள் ராஜராஜனைப் படையெடுக்கத்தூண்டியது. ஐந்தாம் மகிந்த (981-1017) தனது இந்தியக் கூலிப்படையினரை அடக்கக் (இந்தப் படையை எந்தக் காலத்திலும் கட்டினுள் வைத்திருப்பது இயலாத காரியம்) கவனம் கொண்டிருந்தான்.
இலங்கை அரசர்கள் காலப்போக்கில் இந்தியக் கூலிப் படையினர் மேலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது.
உள்நாட்டுச் சிங்களப்படையினர் போர்முனைப்பும் தாக்குதலில் அதிக தீவிரமும் அற்றதாக இருந்ததே இதற்குக் காரணம்.15 இந்தியக் கூலிப்படைகள் தென்னிந்தியாவில் அவர்களின் பிராந்தியப் பெயர்களாலேயே தமிழர், கேரளர்,
கர்நாடகர் என அழைக்கப்பட்டனர்.
மலபார் சிப்பாய்கள் இராணுவத்தினுள் கலகக்காரர்களாக இருந்திருக்கின்றனர்.
உள்நாட்டுப் போர்கள், குழுக்களுக்கிடையிலான முறுகல்கள் இலங்கை அரசர்களை இந்தியக்கூலிப் படைகளில் தங்கியிருக்கும் நிலைமையை உருவாக்கியது. ஏழாம் நூற்றாண்டில் துரதிஸ்ரவசமாக முன்னோடி மாதிரி ஒன்று உருவானது. தோற்கடிக்கப்பட்ட சிங்களத் தலைவர்கள் இந்தியாவிற்குத் தப்பி செல்வார்கள்.
அங்கிருந்து இந்தியப் படைகளுடன் போரைத் தொடர திரும்பி வருவார்கள்.
இவ்வாறாக இலங்கை அரசியல் நடவடிக்கைளினுள் சந்தர்ப்பவாத இந்தியப் படைகளை உள்ளிழுத்துக் கொண்டனர்.16
மூன்றாம் அக்க போதியின் முடியைப் பறித்த ஜெத்தாதிஸ்ஸவை வெல்ல தமிழ் கூலிப்படையினரை அக்கபோதி பாவித்திருக்கிறான்.17
கூலிப்படையினர் மீதான தங்கியிருத்தல் அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்குப் போதுமான கூலி கொடுக்க வேண்டும் அன்றேல் கொள்ளைகளில் ஈடுபட வேண்டும் இல்லாவிடில் அப்படையைத் தக்க வைத்துக்கொள்ள முடியாது. இலங்கை அரசன் தீவு முழுமைக்குமான ஆட்சி அதிகார முடையவன் என உரிமை கோரினும் அவர்களது அதிகாரமும் ஆட்சியும் ரஜரட்ட என்றழைக்கப்பட்ட மையவடக்குப் பகுதியே அவர்களின் கோட்டமாக இருந்தது. உலர் வலயச் சமவெளியான ரஜரட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்குக் குளங்களிலிருந்து வரும் திருக்கு மறுக்கான நீர்ப்பாசன அமைப்பையே நம்பி இருந்தனர்.
தெற்கு மேற்கு மத்திய பிரதேசங்கள் அபிவிருத்தியில் கீழ் நிலையிலிருந்தன.
இவைகள் முறையே றோகண, தக்கிண தேச என்றும் அழைக்கப்பட்டன.
இப்பிரதேசங்கள் தற்காலிகமானதும்
ஊசலாடுகின்றதுமான மேலாட்சி இருந்ததே ஒழிய நேரடி ஆட்சியின் கீழ் இவை இருக்கவில்லை. தக்கிணதேசம் மரபுரீதியான வாரிசுரிமைப் பிராந்தியமாகவம் இருந்தது.18 இலங்கையின் ஏனைய பாகங்களில் கொள்ளையிட செழிப்பான
"எதிரி" பிரதேசங்கள் இல்லாமையும் இந்தியாவினுள் நுழைந்து கொள்ளையடிக்க படை அசைவுக்கான தேவைகளை நிறைவுசெய்ய வளங்கள் போதியளவு இல்லாதிருந்ததும் குறிப்பாக உள்'நாட்டுக் கலவரங்களின் போது படைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது - முடிக்கெதிராக உரிமை கோருவோர் ஒருவரின் மரணமும் அக்காலத்தில் அரிதாகவே இருந்தது -
கடினமானதொரு காரியமாகும். அநுராதபுரமே கட்டற்ற கூலிப்படைகளால் அச்சுறுத்தலுக்குள்ளாகக் கூடிய நிலையிலுமிருந்தது.
மூன்றாம் அக்ர போதி டத்தோபதிஸ்ஸவிற் கிடையிலான உள்நாட்டுப் போரில் அரச, விகாராதிபதிகளின் செல்வங்கள் அநுராதபுரத்தில் கொள்ளையிடப்பட்டன.
அரச மாளிகையும் புனித எச்சம் பூஜிக்கப்படும் விகாரையும்19 தீயிடப்பட்டது.
இராணுவத்தை கட்டப்படுத்த திடமனதுடனான உறுதிவாய்ந்தவனாக அரசன் இருக்க வேண்டும். ஐந்தாம் மகிந்தவிற்கு இந்தத் தகுதிகள் இருக்கவில்லை. பௌத்தப் பதிவேடுகள்20
பிற்காலத்தில் மகிந்தவின் உறுதியற்ற தன்மையே சோழர்களின் படையெடுப்பிற்கு வழி வகுத்ததெனக் குற்றம் சாட்டின.
(மகிந்த) ஆட்சி பரிபாலனத்தை விட்டு தடம்புரண்டு போனவர். உறுதியான குணாம்சங்கள் கொண்டவரல்ல. விவசாயிகள் அவரிற்கான பாகத்தைக் கொடுக்கவில்லை. இளவரசனாகத் தனது பத்தாவது வயதிலேயே எல்லா செல்வங்களையும் இழந்தவர் அதனால் தனது இராணுவத்திற்கான கூலியை அவரால்த் தரமுடியவில்லை. அதனால் அவர்களைத் திருப்திப்படுத்தவும் இயலவில்லை. கேரளப் படைமுழுவதும்; கூலி கொடுக்காததால் அரச மாளிகை வாசல் முன் வன்முறைக்கு ஆயுத்தமாக கூடினர். கைகளில் வில் அம்பு, வாள்கள் (இன்னும் பிற ஆயுதங்கள் "எங்கள் கூலி எங்களுக்குக் கிடைக்கும் வரை அவர் உணவுண்ணக் கூடாது" (மிரட்டும் கோசம்) ஆனால் அரசன் அவர்களை முட்டாளாக்கிவிட்டு அசையக் கூடிய எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு சுரங்கப்பாதை வளியாகத் தப்பி றோகண கானகத்திற்கு விரைந்து தப்பிப் போனான்"21
இலங்கையின் உள்நாட்டு நிலைமையை வியாபாரிகளின் மூலம் அறிந்து கொண்ட சோழ அரசன் இவனுடைய பெயர் பௌத்த பதிவேடுகளில் குறிப்பிடவில்லை எனினும் முதலாம் ராஜராஜ சோழன்22
என்பது திண்ணமாகத் தெரிகிறது,
இலங்கை மீது படையெடுக்க முடிவெடுத்தான். ஒரு சாதாரண நிலமை இந்தச் சந்தர்ப்பத்தை விளக்கச் சொல்லப்படுகிறது. அதாவது,. அரசன் ‘பலமற்றவனாக’ இருந்ததால் நட்பு சக்திகளை இழந்தான் அதனால் கிராமங்களின் வருமானத்தையும் இழந்தான். இதுவே கூலிப்படைகள் கிளர்ச்சி செய்வதற்கு ஏதுவானது. சோழனின் படையெடுப்புக்கும் வழிவகுத்தது என்பது. இது ஒரு சுவாரசியமான தகவல். இந்த விளக்கம் ஒருசார்புக் கருத்தாக எளிமைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம்.
ஆனால் பொருத்தப்பாடற்றது என்று மறுத்து விடவும் முடியாது இருக்கின்றது.
சிங்கள அரசர்கள் முகங்கொடுத்த பல பிரச்சினைகள் சோழர்களையும் சுற்றி வளைத்ததுதான். குறிப்பாக ‘மனத்திடமற்ற’
அரசன் வாரிசுரிமையாக உப்பி ஊதிப் பெருகிய இராணுவத்தைப் பெற்றுக் கொண்டால் அது அரசுரிமையை கைப்பற்ற ஆவலாக இருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகளுக்கு ஊக்கமூட்டுவதாக இருக்குமென்பது.
ராஜராஜனின் கல்வெட்டுக்கள் பொதுவான வெற்றியைக் குறிப்பதாகவே இருக்கின்றதேயொழிய விபரமான குறிப்புக்களைத் தரவில்லை. இருப்பினும் சூளவம்சம் தலைநகர் அநுராதபுரம்
‘சோழ இராணுவத்தால் எல்லா வழிகளிலும் மிக மோசமாக அழிக்கப்பட்டது’23
எனக்குறிப்பிடுகிறது.
இது,
பௌத்த பதிவேடுகள்
பெளத்த பிக்குகளால்
- குறிப்பாக அநுராதபுரச் சூறையாடலில் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பிக்குகளால் – அரசமாளிகை தவிர்ந்து –சோழ அநியாயங்களை கடுங் கோபத்துடன் விபரமாகப் பதிவு செய்யப்பட்டதற்கான காரணத்திற்கு விளக்கம் தருகின்றது. அநுராதபுர மதக்கோட்டங்கள் பெளத்த கோட்டங்கள் இந்துக் கோட்டங்களல்ல.
எனவே தமிழர்கள் அவற்றைச் சூறையாடியதற்கான மிகைப்படுத்தல்களே அவை. இந்துக்கோட்டங்களாக இருந்திருந்தால் உள்ளார்ந்த ஐயப்பாட்டை குறைக்க உதவியிருக்கும்.
இங்குள்ள முரண் சமயக்கோட்பாடல்ல; பொருளாதார நோக்கமே.24 புகழ்பெற்ற அநுராதபுர ‘நான்கு விகாரைகள்’
தெளிவாக செல்வச் செழிப்பு நிறைந்தவையாக, ஆனால் அமைப்பு ரீதியில் பலவீனமாக இருந்தன. மலைப்பூட்டும் அவற்றின் உருவ அளவும் மடாலயங்களின் பல்கூட்டு தொகுதிகளும் கொள்ளையிடுவோரைக் கவர்ந்திருக்க வேண்டும். உலக வாழ்வுடன் எந்தத் தொடர்புமில்லை என போலியாகக் காட்டிக் கொண்டாலும் இலங்கை பௌத்த சங்கங்கள் நன்கொடைகளை, மானியங்களை, அறக்கொடைகளைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருந்து தங்கள் துறவற சபையை நடாத்தத் தேவையான செல்வத்தைச் சம்பாதிப்பதில் வெற்றி பெற்றவர்கள் என்றும் கூறலாம். குறிப்பாக அநுராதபுரத்தில் புனித எச்சங்களைத் தம்வசம் வைத்திருந்தால் சமய ரீதியில் மேலாண்மை பெற்றவர்களாகவும் அரண்மனையுடன் நெருக்கமான. இணைகிற உறவைப் பேணியவர்களாகவும் இருந்தனர்.
தலைநகரின் மகாவிகாரையில் நூற்றுக்கணக்கான பிக்குகள் முடியரசால் கொடுக்கப்பட்ட கிராமங்களின் வருவாயில் வாழ்ந்தனர்.
இதுபோலவே அரசர்களின், உயர்குடிப் பெருமக்களின் கொடைகளும் அவர்களுக்குக் கிடைத்தன. குடிமக்களில் கோவில் சேவைக்கான ‘ஊழியர்களின்’ (அறமிக்கா) அத்துடன் அடிமைகளின்25 உழைப்பும் பிக்குகளின் வாழ்க்கைக்குக் கிடைத்தது. அரசர்கள் வழமையாக ஊழியர்களை விகாரைக்களுக்கு ஒதுக்குவார்கள் அத்துடன் குறிப்பிட்ட கிராமங்களின் வருவாயும் அவர்களுக்குக் கிடைக்க வழிசெய்யப்பட்டது.26
இந்த ஊழியர்களுக்கு மேற்பார்வையாளர்கள் இருப்பார்கள். முழு விகாரைத் தொகுதிக்குமாக
தலைமை மேற்பார்வையாளர் இருப்பார்.
அநுராதபுர விகாரைகள் நுணுக்கமான நிர்வாக அமைப்பையும் செல்வத்திரட்சியையும் கொண்டிருந்தன.
Wilheim Giger இன் கறாரான பார்வையில்
‘செல்வந்த விகாரையில் வாழும் பௌத்த துறவிகள் நிச்சயமாக வறுமையில் வாழவில்லை’27 ஆகவே அநுராதபரம் இருவகையில் சோழர்களின் கொள்ளைக்கு பலவீனமாக இருந்தது: முதலாவது ஆட்சி மையம் அதன் அரச கஜானா இரண்டாவதாக பாரிய மத மையமாக சமயரீதியான கலைச்செல்வங்கள் ஏனைய வழிகளில் குழுமிய செல்வம்.

‘சோழர்கள் பட்டமகிஷியைக் கைப்பற்றினர் , ஆபரணங்களை எடுத்துக்கொண்டனர், அரசன் வாரிசுரிமையாய் பெற்ற மணிமுடியை எடுத்துக்கொண்டனர். அரச ஆபரணங்கள் முழுவதையும் கைப்பற்றினர். கடவுளின் கொடையான விலைமதிப்பற்ற வைரங்கள் பதிக்கப்பட்ட கங்கணங்களையும் எடுத்துக்கொண்டனர். உடைக்கமுடியாத வாள், புனிதப் பொருட்களாகப் பேணப்பட்ட, (புத்த பகவானால் அணியப்பட்டதாகக் கருதிப் பேணப்பட்டு வந்த ) புனித எச்சமான கிழிந்த துணியும் அவர்கள் வசமாயிற்று. பயத்தால் காட்டினுள் தப்பியோடிய அரசனையும் சமாதான உடன்படிக்கை என்ற சாக்கில் பிடித்துக் கொண்டார்கள். பின்னர் அரசனையும் தாங்கள் கைப்பற்றிய செல்வம் முழுவதையும் சோழ அரசனுக்கு அனுப்பி வைத்தார்கள். மூன்று சங்கங்களிலும், இலங்கை முழுவதும் இருந்த புனித அறைகளை உடைத்துத் திறந்து பெறுமதி வாய்ந்த தங்க விக்கிரகங்களையும் இன்னும் பிறபொருட்களையும் எடுத்துப்போனார்கள் இங்குமங்குமான எல்லா மடாலயங்களையும் மூர்க்கமாகச் சிதைத்தார்கள். இரத்தம் உறுஞ்சும் யக்காக்களைப் போல் இலங்கையின் எல்லாச் செல்வங்களையும் தமக்கென எடுத்துப்போனார்கள்’28
பௌத்த பதிவேடுகளின் மிகைப்படுத்தும் தன்மையை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டாலும் சோழர்கள் நகரைத் துவம்சம் செய்தார்கள் என்பது தெள்ளத்தெளிவானது. இந்த அழிப்பு நடவடிக்கையால் அநுராதபுரம் தன் முதன்மைத்தானத்தை இழந்து அரசியல் கேந்திர முக்கியத்துவத்தை இழக்க பொலநறுவை வெற்றிகொண்டது.29 பொலநறுவை அவ்வப்போது முன்னைய காலங்களில் அரச குடும்பத்தவர்களது வதிவிட நகரமாக இருந்திருக்கின்றது. இப்போது
சோழர்களால் ஆட்சி செய்யப்பட்டு வடஇலங்கையில்
அவர்களது முதன்மைக் குடியேற்றமாகிற்று.30
இந்த மாற்றம் ஒரு தற்காலிக மாற்றமாக இருக்கவில்லை. 1070 இல் சோழர்கள் முற்றுமுழுவதுமாக இலங்கையிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின்னரும் இலங்கை அரசர்கள் தொடர்ந்து முன்னைய தலைநகர் அநுராதபுரத்திற்கு திரும்பிவராது பொலநறுவையிலிருந்தே ஆட்சிபுரிந்தனர். முரண்நகை என்னவெனில் பொலநறுவை மேற்கிலிருந்து இந்தியப் படையெடுப்பிற்கெதிரான பாதுகாப்பான இடமாகவும்,
அத்துடன் இலகுவில் புகமுடியாத கட்டுக்கடங்க்காத தன்மையைக் கொண்ட றோகணப் பிராந்தியத்திற்கும் அருகாமையில் அதன் அமைவிடம் இருந்ததுதான்.
அநுராதபுரத்தைச் சோழர்கள் முற்றுமுழுவதுமாகச் சூறையாடிய போதிலும் ரஜரட்டையின் நுட்பமான நீர்ப்பாசன தொகுதிகளைக் குலைக்க எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பது தெரிகின்றது. அல்லது பதிவேடுகள்
- தங்கள் மதிநுட்பமான அரசர்கள் இத்திட்டங்களை நிறைவேற்றியதாக வானளாவப்
புகழ்திருக்கும். - பதிவேடுகளில்
இவை குலைக்கப்பட்ட பதிவை எழுதாமலிருக்க காரணமெதுவும் இல்லை – வேண்டுமென்றே இதனைப்பதிவிடாது தவிர்த்திருக்கலாம். இன்னுமொருவகையில் பார்ப்பின் இந்த நீர்ப்பாசனத் தொகுதிகளை உள்ளுர் கொவி தொழிலாளர்கள்களைத் திரட்டிப் பராமரிப்பதற்கான முனைப்பற்றவர்களாக சோழர்கள் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் முதலாம் விஜயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து விரட்டியடித்த பின்னர் பாரியளவிலான சீரமைப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டதாகப் பதிவேடுகள் குறிப்பிடுகின்றன.
ஆயினும் இந்த நடவடிக்கைகள் இதற்கு முன்னைய மன்னர்களால் எடுக்கப்பட்ட பெரியளவிலான நீர்ப்பாசனத்தொகுகளைச் சீரமைக்கும் வேலைகளை விட சிறப்புவாய்ந்ததாக் கொள்ள எந்தக் காரணங்களும் இல்லை. ஏனைய அரசர்கள் காலக்கிரமமாக இயற்கை அழிவு, காலப்போக்கிலான பாடழிவுகளை நிவர்த்திசெய்து தந்தமை பற்றிய பதிவேடுகளில் பல இடங்களில் இவை பற்றிய புகழுரைகள் இடம்பெற்றுள்ளன. ரஜரட்டையின் நீர்ப்பாசன அமைப்பிற்கு ஏற்பட்டது பெரும் அழிவு,
அது இயற்கையானதாகக்கூட இருந்திருக்கலாம், அதுவே சோழர்களை இறுதியாக இலங்கையைவிட்டு வெளியேறுவதைத் துரிதப்படுத்தியிருக்கலாம்.
இலங்கையைவிட்டு சோழர் வெளியேறிய பின் திருத்த வேலைகள் நடந்தன என்பதை தவிர வேறு சான்றுகள் இல்லாததால் வரலாற்றாளர்கள் இதனை ஒரு சாத்தியமாகவே முன்வைக்க முடியும். பதின்மூன்றாம் நூற்றாண்டு அழிவுப்போரின் பின்னர் குடிசனத் தொகை பெருமளவில் குறையாமலும் அரச ஆட்சியாளர்களால் கைவிடப்படாமலுமிருந்த ரஜரட்ட பிரதேசத்தை இலங்கை முடியரசு மீள அரச கோட்டமாக நிலைநிறுத்தக் கூடியதாக இருந்தென்பதிலிருந்து, சோழ அரசு அநுராததபுர தலைநகரை வெகுவாகச் சீரழித்தது போலல்லாது ரஜரட்டைக்கு சோழ ஆக்கிரமிப்பின் போது பெரிய அழிவு ஏற்படுத்தப்படவில்லை என்பதையும் உய்த்துணர முடிகிறது.
குறிப்புக்கள்
* கருங்குழல் ஆதனார் பாடிய புறநானுறு 07 “தோல் பெயரிய எறுழ் முன்பின்” என்று தொடங்கும் பாடலின் இடையில் வரும் வரிகளினுடைய பொருளே இங்கு மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது. அவ்வரிகள்
பின்வருமாறு
"…எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர்சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ!.. "
இச்செய்யுய்வரிகளின் கிட்டிய பொருள் வருமாறு: "பகலும் இரவும் எண்ணாது பகைவர்களின் ஊர்களைச் எரிக்கின்ற தீயின் வெளிச்சத்தில், அச்சமடைந்த அந்நாட்டு மக்கள் தம் சுற்றத்தை அழைத்து கதறி அழும் அவலக்குரலின் ஆரவாரத்தோடு கூடிய கொள்ளையை விரும்புகின்றவன்; ஆதலால் அந்நாடுகளில் நல்லனவே இல்லாது அழிக்கும்படியாக இயக்கப்படும் தேரையுடைய வளவ! ."
No comments:
Post a Comment