Friday, March 22, 2013

மாறிக்கொண்டு வரும் மரபு : ஈழத்தமிழர் வாழ்வியலில் மரபுகள் மாற்றமும் மாற்றத்தின் போக்குகளும் - 2


மாறிக்கொண்டுவரும் மரபு - ஒரு கருதுகோள் குறிப்பு -1இப்பகுதி ஈழத்தமிழர் வாழ்வின் மரபியல்ச் செயற்பாட்டுக் கூறுகளை எடுத்து ஆராய்கின்றது. அன்றாட பழக்க வழக்கங்கள், இனப்பெருக்கம் , கல்வி, உணவு , உடற்தூய்மை, உடை , சிந்தனா  வெளிப்பாடு,  பொருளாதாரம் , அரசு, நம்பிக்கைகள் , வழிபாடுகள் விழுமியங்கள், சிந்தனைப் பரிமாற்றங்கள்மற்றும் உணவுப் பழக்கம்,  ஆன்மீகம்,சமய நம்பிக்கைகள் , திருவிழாக்கள், தீட்டு மற்றும் துடக்கு, தொழில்கள்அழகியல் உருவாக்கம், விஞ்ஞான வளர்ச்சி, மருத்துவம், குழும அமைப்பு, சமுக உற்பத்தி, உறவுகள் ,போர், இடப்பெயர்வு, வரலாற்றைக் காத்தல் , விவசாயம், தொடர்பாடல் ஆகிய பரப்புகளின் மீது மரபு ரீதியான மாற்றங்கள் இங்கு அவதானிக்கபடுகின்றன. அவை குறித்த   நன்மை தீமைகள் இங்கு ஆராயப்படவில்லை.


அன்றாட பழக்க வழக்கங்கள்

    மக்கள் பண்பாட்டின் எல்லாநிலைகளிலும் மரபுகள் இயங்குகின்றன. மக்கள் பண்பாட்டை எடுத்துரைக்கும்  பலகூறுகளில் அன்றாட பழக்க வழக்கங்கள் ஒரு கூறாகும். பழக்க வழக்கம் என்பதை பழக்கம் + வழக்கம் என்ற முறையில் காணலாம். பழக்கம் என்பது தனிமனித செயல் என்றும் அதுவே ஒரு குழுவினரிடம் அல்லது சமூகத்தினரிடம் காணப்படும்போது வழக்கமாகிப்போகிறது என்றும் விளக்கலாம். பழக்க வழக்கங்களில் மரபு பேணப்பட்டாலும் பல நிலைகளில் மரபுமாற்றம் காணப்படுகிறது.[13]
 உடற்தூய்மை
 பல்துலக்கல் : 
காலையில் எழுந்தவூடன் பல்துலக்கும் பழக்கம் சிறியவர் ; முதல் பெரியவர்  பால் பாகுபாடின்றிஇ சாதி மத இன பேதமின்றி மேற்கொள்ளும் ஒரு செயலாகும். பல்துலக்குதலில் பெரியளவில் மாற்றம் ஏற்படவில்லை. வாழ்வின் அழுத்ததம் மற்றும் நேரமின்மை முறையான சுகாதாரம் பேணுதலுக்காக  பல்துலக்களை இரவில் மேற்கொள்ள வைத்தாலும் காலையில் பல்துலக்குவது மாறவில்லை. ஆனால் பல்துலக்குவதற்கு பயன்படுத்திய பொருட்கள் மாற்றமடைந்துள்ளன. பல்துலக்குவதற்கு பய்னபடுத்திய பொருட்களான ஆல் மற்றும் வேம்பிள் குச்சிகள் மற்றும் கரி போன்றவற்றை பற்பொடி வலுவிலக்கச் செய்தது. தற்பொது பற்பொடிக்கு பதிலாக பற்பசைகளும் தூரிகைகளும்  பற்பொடியின் இடத்தை இல்லாமல் செய்ததுடன்  வெளிற்றும் பற்பசையுடன் தூரிகை   கொண்டு பலதுலக்குவது புதிய மரபாக மாறியூள்ளது.

வாய் கொப்பளித்தல் , நாக்கு வழித்தல் மட்டுமே  நூற்றாண்டுகளுக்கு முன்பு ஈழத்தமிழரிடையே பரவலாகக் காணப்பட்டதொன்று . பின்பு, கரி, உமி , செங்கல் போன்ற விளக்கும் உத்தி கொண்ட துணிக்கைகளை அவரவரது சுகாதார அறிவுக்கெட்டியதைப் போல பயன்படுத்தினர். வரிசைப்படுத்தலில் செங்கல் பாமர மக்களாலும், கரி சாதாரண மக்களாலும் பரவலாக உபயோகிக்கப்பட்டு வந்தது. பின் பற்பொடி பரவலானது.

கராம்பு,கருவாத்தைலம்போன்றவற்றைபற்சுகாதாரத்திற்காக கொதி நீராவியில் வடித்துப் பயன்படுத்தினர். பிற் காலங்களில் அவ்வுத்தி பற்பசையில் சேர்ந்தது.பல்துலக்காமல் ஆகாரம் உட்கொள்ளக் கூடாது என்பது மரபான வழக்கமாக இருந்து வந்தது. ஆயினும் இப்போது பெட்காபி என்பது அந்த மரபான வழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதுகுழந்தைகளின் பற்களை மெல்லிய துணிகளால் சுத்தம் செய்தனர். அதுவே சுகாதாரமான முறையாக தற்போதும் கடை பிடிக்கப்படுகிறது.

மலசல கூடம்.
மலத்தை ஒரு இடத்திலும் சலத்தை ஒரு இடத்திலும் கழித்தாலே மரபாக இருந்து வந்தது.  மலத்தைக் கிடங்கு தோண்டி புதைத்தல் இருந்து வந்தது. சலம் நீர் நிலைகளுக்கருகாமையில் கழிக்கக் கூடியதாக இருந்தது. பின்னர்  பானைகள் , குண்டாக்கள் போன்றவற்றை மலம் சேகரிக்கும் பாத்திரமாக பயன்படுத்தினர். வீட்டுக்குத் தொலைவிலேயே மலத்தினை சேகரித்தனர். பின்னர் மலக் குழிகள் தோன்றின தகரத்தால் மூடி வைக்கப்பட்ட குழிகளில் மலங்கழித்தனர் இரு பாலாரும். சுருட்டு, புகையிலை, பீடி போன்றவற்றை மலங்கழிக்கும் சவுகரியத்திற்காக உபயோகப்படுத்தினர்.

பின்னர் பானைகளை வீட்டின் ஒதுக்குப்புறமாக வைத்திருந்தனர். இது ஆங்கிலேயர்கள் வந்த காலப்பகுதி. அச்செயன்முறை சுகாதாரக் கேடாக இருந்ததை ஒட்டி மல சல கூடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் கழிவறைகள் வீட்டின் கொல்லைப் புறத்தில் அமைக்கப்பட்டு, நீர் நிலையில் இருந்து நீர் மொண்டு வரப்பட்டது.

நீர்ப்பானைகள் கழிவறைக்குள் சேர்க்கப்பட்டன.  கழிவறை வீட்டினை ஒட்டி பின்புறமாக அமைந்தது.   பின் அமரக் கூடிய  ஸ்பானிய கொமட் கழிவறைகள் வந்து சேர்ந்தன அதனைத் தொடர்ந்து  அமெரிக்க 'ஜகுஸிமுறைலான குளியலறை இணைந்த, கழிப்பறைகள் ஈழத்தில் வீட்டின் அங்கமாக தொடருகின்றன.

குளித்தல் : 
நாள்தோறும் குளித்தல் எனபதும் மரபான வழக்கமாக இரந்துவருவது. இதில் மாற்றங்கள் பெரிதாக இல்லாதபோதும் ஒரேநேரத்தில்  பலர்  குளிக்கக்கூடிய மரபான இடங்காளன ஆறுகள்,குளங்கள், ஒடைகள், கிணறுகள் என்பவற்றிலிருந் விலத்தி மனிதன் ஒராளக்கான குறுகிய  மூடிய குளியறைகளுக்கு இடம் பெயர்ந்ததும்  வீட்டில் உள்ள அனைவரும் காலையில் வெளியெ செல்ல வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டதும் குளிப்பதை மாலை அல்லது இரவில் மேற்கொள்ள வேண்டியதாக மாற்றியூள்ளது. குளியல் முறைகள் மற்றும் பொருட்களிலும் மாற்றங்கள் தெரிகின்றன. வாளியால் அள்ளி குளித்தல் அல்லது நீர் நிலைகளில் முங்கிக் குளித்தல் போன்ற முறைகளிலிருந்து பூவாளி  மற்றும் குளியல்த் தொட்டிகளில் உடலைக்கழுவூதல் என்பதாக குளியல் மாற்றமடைந்து வருகின்றது.

சோப்பு மஞ்சள் போன்ற குளியலப்  பொருட்களுக்குப் பதிலாக முகம் தலைமுடி உடல் எனத் தனித்தனியான குளியல்த் திரவியங்கள் பயன்படுத்தப்படுவதும் அதிகரித்துள்ளது.

உடைகழுவல் :  
கந்தையானாலும் கசக்குதல் நம்மரபு. முன்னைய நிலவுடைமைச்  சமூதாதயத்தில் உடைகழுவல் என்பது குறிப்பிட்ட மக்களுக்கானதாக இருந்தது. பல்வேறு சமூகப்போராட்டங்களும் நவீனமாக்கலின் விளைவுகளும்  அதை பெருமளவில் இல்லாமலாக்கியது. நாள்தோறும் துணிகளை துவைப்பது வழக்கமாகியது. வீட்டுவேலை என்று அதை வகைப்படுத்தியதனூடாக அதுதொடர்வதற்கு  பெண்கள் பயன்பட்டார்கள்.  தற்காலத்தில்  ஆண் பெண் என அனைவரும் உழைக்கும் வழக்கம் இருபாலாரையும் அதனை செயற்படுத்த வைக்கிறது. குழந்தைகளை பள்ளி கொண்டு செல்லுதல் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க சந்தை செல்லல் போன்ற அதிகரித்த வீட்டுப்பணிகளும் அன்றாடம் துணி துவைப்பதை முடிவுக்கு  கொண்டுவரத்தொடங்கியுள்ளன. உடைகளை சேர்த்து வைத்து  வாரஇறுதியில் கழுவும்  பழக்கம் பரவலாக உள்ளது. இதனால் அழுக்குத்துணி கூடை என்ற புழங்கு பொருள் ஒன்று பதிதாக வாழ்வில் சேர்ந்துள்ளது. . அத்துடன் சோப்புக்குப் பதிலாக சலவைத்தூள் பாவனை ஏறத்தாழ முழுமையாக உள்ளது. துணி கழுவூவதற்கு மரபான தும்பு கயிறு தகர அல்லது இரும்பு   வாளிகள் போன்றவற்றுக்குப் பதிலாக பிளாஸ்ரிக் தூரிகைகள்  மற்றும் சர்வங்கள் ,வாளிகள்  பாவிக்கப்படுகின்றமை மாற்றத்துக்குள்ளான அம்சமாகக் கொள்ளவேண்டி உள்ளது. அத்துடன் சலவை இயந்திரம் அன்றாடப்  புழக்கத்தில் உள்ளது.

உடை மற்றும் வெளிப்பாடு :  

உடை அணிதல் -
 மரபான விடயங்களில் அதிகம் சர்ச்சைக்குள்ளான  விடயம் உடை  தொடர்பாகவே  இருக்கின்றது. ஆயினும் போக்குவரத்து நெருக்கடிகள் மற்றும் அலுவலகப்பணிச்சுமைக்கள் நேரப்பற்றாக்குறை போன்றவற்றின்காரணமாக உடைகளின் தேர்விலும்  வடிவங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தியூள்ளன. உடைகளே அதிகளவு இயல்பு மாற்றத்தைக் கொடுக்க வளனவாக சித்தரிக்கப்படுகின்றன. போக்குவரத்தின் போது அலுவலகப்பணியின் போது இலகுவானதானதாகவும் அணிந்துகொள்ள நேரம் குறைவாக எடுப்பதுமாக அமையு ம் உடைகளே நடைமுறைப் பாவனையில் உள்ளது.உத்தியோக முறைக்கு ஏற்பவும், சீருடைகளும் தற்காலத்தில் ஏற்பட்டுள்ளன. பட்டு, கம்பளி, பருத்தி துணி வகைகளுடன், சேதன இரசாயன பாவனைக்குள்ளான புடவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் பட்டு, கம்பளி, பருத்தி ஆகியவற்றின் பெறுமதி நாளாந்தம் அதிகரிக்கவும் செய்கிறது.

வெளிநாட்டுத் தொடர்புகள்  காரணமாகவும்  அங்கிருந்து வந்து செல்லும் உறவினர்களின்  பழக்கம் காரணமாகவூம் மரபான உடைஅணிவதில் மாற்றங்களை  அவதானிக்க முடிகிறது. இதில் சுவாரசியமான விடயம் என்னவெனில் வெளிநாட்டுக்கு மணமக்களாகப் போவதற்கு தயார்  செய்வதற்காக உடைஅணிவதில் மாற்றங்கள் செய்யப்படுவதைக்கூட சில இடங்களில் காணமுடிந்தது. உடை  விடயத்தினை மட்டும் மரபு மாறுதல் என்பதில் இருந்து கலாசார சீர்கேடு எனும் பதத்தினுடன் பார்கிறார்கள். சிந்தெடிக் புடவைகளே வியாபாரத்துக்கு உகந்ததாக இருக்கின்றது. முன்பு ஆடைகளை நடமாடும் வியாபாரிகளுக்கூடாக வீடுகளில் பெற்றவர்கள், பின் ஊர் அங்காடிகளில் பெற்றார்கள். தற்போது சுய தேவையைப் பொறுத்து அன்றாடமோ , கையிருப்பிலோ பெற்றுக்கொள்ளுகிறார்கள்உச்சவங்களுக்கு புதிய ஆடை அணிவது இன்றும் மாறாது இருபதாகும்.


அழகுசாதனப் பொருட்களின் பயன்பாடு :
முகப்பூச்சுக்கள் மற்றும் உடற்பூச்சுக்களின் உள்ளீடும் வெளியீடும்  புதுமரபாகவே மாறியூள்ளது. அதே அளவு  வாசனைத்திரவியங்களின்  பயன்பாடும் அதிகரித்துள்ளது. அத்துடன் ஒப்பனை என்பது காலங்காலமாக முடியாத ஒரு பழக்கமாக மாறிவருகிறது. சிகைஅலங்கரிப்பும் சிகைளின் நொதிய   வடிவ நிறம் மாறல்களையூம் இதனுடன் சேர்க்கலாம்முன்பு வாசனைத்திரவியங்களினதும் நறுமணப் பூச்சுக்களினதும் விலை, மற்றும் பாவனை அதிகமாகவே இருந்தது. ஏற்றுமதிப் பொருட்களாக இவை இருந்தன. மஞ்சள், குங்குமம் குங்கிலியம், புனுகு, அகில், சாம்பிராணி போன்றவை இன்றும் வழக்கத்தில் இருக்கின்றன. கற்றாழ, வேம்பு போன்றவை அழகியல் சாதனங்களாக அன்று போல் இன்றும் வடிவம் மாற்றப்பட்டு உபயோகிக்கப்படுகிறது. எண்ணை  வகைகள், தேங்காய் எண்ணையே  பாவனையில் இப்போதும் அதிகமிருப்பது. தற்போது இரசாணய மாற்றங்களுக்குட்படுத்திய எண்ணைகள் புழக்கத்தில் உள்ளன

உணவு  மற்றும் உணவுப்  பழக்க வழக்கங்கள்:

உணவு மனித வாழ்க்கையின் முக்கிய அங்கம். உணவுப்  பழக்கங்கள் பண்பாட்டின் ஒரு முக்கியமான பகுதியாகின்றன. எதை உண்கிறோம்  உணவை எப்படித் தயார்ப்படுத்துகிறோம் , எப்படிப் பரிமாறுகிறோம் , எப்படி உண்கிறோம்  என்பனவெல்லாம் நமது வாழ்க்கை முறையில் ஏற்படுகிற மாற்றங்களையொட்டி மாறுகின்றன.

இலைகள் , வாழை  இல்லை, பூவரசிலை , தேக்கிலை, பலாவிலை போன்றவற்றை  கல்லைகள் தைத்து உமுன்பு உண்டார்கள் பின் தேக்கும், வாழை  இலையும் இன்று வரைக்குமானது. மாமிசம் உண்டார்கள். மரக்கறி வகைகள் உண்பவர்களாக பின் சில சாரர் பிரிந்தார்கள். சில்வர், அலுமினியம், தங்கம் போன்றன ஆடம்பர நிலைகளுக்கேற்ப பயன்படுத்தப்பட்டன. விருந்தோம்பல் ஈழத்தமிழரின் பண்பாக இருந்தது. பொதுவாக வாழை இல்லை, சில்வர் தட்டுக்களை  விருந்தோம்பலுக்கு பயன்படுத்தினார்கள் முசுலீம்கள் பீங்கான்களை  உணவுக்குப் பயன்படுத்தினார்கள். உயர் தர உணவுகளை தற்போது பீங்கான்களிலேயே பரிமாறுகிறோம்.

உணவு  : 

உணவு வகைகள் மரபில் அத்தியாவசியமானவை. அவைகளில் ஏற்படும் மாற்றங்கள் முக்கியமானவை. தற்காலத்தில் கோதுமை மா, அரிசி மாவாலான பண்டங்கள் அதிகம் உட்கொள்ளப்படுகின்றன. சோறு பிரதான உணவாக நீண்டகாலமாக இருக்கின்றது. சாமை வரகு, குரக்கன் போன்றனவும் சோறு என்றே அழைக்கப்படும். தானியங்கள், கீரை வகைகள், இறைச்சிமீன், முட்டையைச் சேர்த்துக் கொள்வதும் மாறாத மரபு.

பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளாக ஊறுகாய் பழப்பாகு , இறைச்சி வற்றல் ,மதுபானம் போன்றன மரபாக இருந்து வந்தது. தற்போது கிடைத்தற்கரிய உணவுப் பொருட்கள், இறக்குமதி உணவு வகைகள், துரித உணவுகள், சமைத்த உணவுகள், சமையல்க் கலவை செய்த உணவுப் பொருட்கள் போன்றன சந்தையில் கிடைக்கின்றன துரித உணவகங்கள் பாரிய மாற்றங்களாகும்.வெளி நாட்டு உணவுகள் இங்கு கிடைக்கின்றன.

உணவகங்களில் சென்று உணவருந்துவது முன்பு நாகரீகக் குறைவான மரபாக இருந்து, தற்போது நாகரீகங்களில் ஒன்றாக ஆகியது. சோற்றுப் பொதிகள் ,கட்டுச் சோறு, எடுப்புச் சோறு, பாசல்க் காரன், தற்போது 'ஹோம் டிலிவரி' போன்றதாக மாற்றமடைந்துள்ளது.

உணவு சம்பந்தமான சுகாதாரங்கள், விருந்துபசார முறைகள், உணவுப் பரிமாற்ற முறைகள்.

உணவு பரிமாறப்பட்டு சாப்பிடுவது முன்னைய மரபாக இருந்தது. விருந்தோம்பலில் பரிமாறுதல் முக்கிய பங்கை வகித்தது தற்போதைய விருந்துபசாரங்கள் சுய பரிமாறலை மரியாதைக்குரிய விழுமியமாகக் கொள்கின்றன 

உணவு  தயாரிப்பு :
தற்போது பெரும்பாலும் என்பது அதிகாலையில் அல்லது மாலையில் என்றாகிவிட்டது. காலை மதியம் அல்லது மூன்று நேரத்திற்குமாக ஒரே வேளையில் உணவு தயாரிக்கப்படுகிறது. இதன் காரணமாக இரண்டுவேளை சிலசமயம் மூன்று வேளையு ம் ஒரே உணவை  உண்ணுவதும் இடம்பெறுகிறது. உணவு  தயாரிப்பு கருவிகளும் மரபிலிருந்து பெருமளவு  மாறியு ள்ளன.

கல் அடுப்புக்கள் ,சூட்டடுப்புக்கள், விறகடுப்புக்கள் , மண் எண்ணைக்  அடுப்புக்கள் ,  வாயு அடுப்புக்கள் , மின்சார அடுப்புக்கள் ,நுண்ணலை அடுப்புக்கள்என்ற ரீதியில் மரபு மாறியுள்ளது.உணவு பதநிடுதலுக்கும், உணவின் பொறி முறை மாற்றத்திற்கும் இயந்திரங்கள் பாவனையில் உள்ளன.


இனப்பெருக்கம்.
மனித இனம் தனது நிலைப்பை இனப்பெருக்கத்தால் அன்றி வேறெந்த மரபிநூடாகவும் முழுமையாகத் தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஈழத்தமிழரிடையே திருமணம் எனும் அமைப்பு வர முன்னர்  கலவிக்கான இனப்பெருக்கம்  எல்லாக் குழுமங்களைப் போன்றே நிகழ்ந்திருக்கிறது. அமைப்பு ரீதியான கலவி அனுமதியைக் கொண்டாடும் வைபவங்களை ஈழத்தில் சிறப்பாக காலங் காலமாக சாதி, மத அமைப்புக்களின் படி தமிழர்கள் நடார்த்துகிரார்கள்.
காதல் மணம்  இயல்பாகவே இருந்தது. பெருநிலபுத்துவ ஆதிக்கத்தின் பின்னர், சொத்து முறைமை, சாதி முறைமை காதல்த் திருமணங்களை எதிர்ப்புக்குள்ளாக்கியது. இருப்பினும்  மனிதர்களிடையே இயல்பாக எழும் நேசம் சார்ந்த கல்வித் தூண்டுதல் எல்லாக் குழும முறைகளிலும்  இயல்பான மரபாக அமைகிறது.

திருமணங்கள் சம்பிரதாய பூர்வமானதாக மதச் சடங்காக திருவிழாகளாக நடை பெறுகின்றன. பால விவாகங்கள் ஆரம்பத்தில் அதிகமாக இருந்தன. பின் இருபது வயதென்பது இருபாலாருக்கும் பொதுவாக அமைந்தது. தற்போது சராசரியாக முப்பது வயதே ஈழத்தமிழரின் திருமண வயதாக இருக்கிறது. இதில் இரு பாலாரும் அடக்கம். திருமணமே இங்கு இனப்பெருக்கத்திற்கான சமுதாய அங்கீகாரமாக உள்ளது. பின்னைய காலங்களில் சட்ட ரீதியாக பதிவு செய்தார்கள் அதுவே இன்றும் முக்கியமான அமைப்பாகிறது . தாலி பூணுதல் மரபாகும். சீதனம் முறைமையில் உள்ளது. சீதன சொத்துக்களின் அமைப்பில் வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இனக் கலப்பு, சாதிக் கலப்புத் திருமணங்கள்  எப்போதும் எச்சரிக்கைக்குள்ளான போதும் அவை நிகழ்த்தே வருகின்றது.  

முன்பு சராசரியாக குடும்பத்தில் எட்டுக் குழந்தைகள் என்ற மரபு தற்போது மூன்று குழந்தைகள் என்றாகி இருக்கிறது. குடும்பத் திட்டமிடல் தற்போது கடை பிடிக்கப்படுகிறது. கருத்தடைச் சாதனங்களின் பயன்பாடும், பாதுகாப்பான உடல் உறவும் இதனை மேம்படுத்துகின்றன

முன் மரபு போலவே  பாதுகாப்பற்ற இனப்பெருக்கங்கள் தொடர்ந்தும் இருக்கின்றன. பல தார மணம்  இருந்தது. தற்போது சட்ட ரீதியான அனுமதி இல்லாததால் அங்கீகாரம் இல்லாத குடும்பங்கள் உள்ளன. பாலியல்க்  குற்றங்களும் , முறையற்ற பாலியல்த் தேவைகளும் இன்னமும் இருக்கின்றது.

ஈழத்தமிழரிடையே அங்கீகாரமற்ற ஆண் ஆண், பெண் பெண் போன்ற ஓரினச் சேர்க்கின் பற்றிய அவதானமும் தற்போது இருக்கின்றது. முன்பு இல்லாது தற்போது தோன்றியிருக்க வாய்ப்பில்லை. முன்னைய மரபு ,அங்கீகாரமில்லாதமையினால் அவற்றின் அளவுகோல் தெளிவில்லாமல் இருந்தது. இன்று வரைக்கும் அம்மரபு அங்கீகரிக்கப்படவில்லை. பருவம் வந்தவர்களை  இனப்பெருக்கத்துக்குத் தகுதியானவர்களாக பெற்றோர்களால் நிச்சையிக்கப்படுவதே வரவேற்கத்தக்கதான விழுமியமாக   ஈழத் தமிழர் இடையே காணப்படுகிறது.

திருமணத்தில் இருந்து சட்ட ரீதியான விலக்குப் பெறலும் மரபாக உள்ளது. ஈழத்தில் வாழும் முசுலீம்கள் இதனை மத ரீதியாகக் கடை பிடித்தாலும் பின்பே சட்ட ரீதியாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

(தொடரும்)

No comments:

Post a Comment