Friday, March 22, 2013

மாறிக்கொண்டு வரும் மரபு : ஈழத்தமிழர் வாழ்வியலில் மரபுகள் மாற்றமும் மாற்றத்தின் போக்குகளும் - 3


மாறிக்கொண்டு வரும் மரபு : ஈழத்தமிழர் வாழ்வியலில் மரபுகள் மாற்றமும் மாற்றத்தின் போக்குகளும் - 2


கல்வி

மனிதனது சிந்தனா சக்தியிலும், பல்த்திறமையிலும் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூறு. குருகுலக் கல்வி முறை நீண்ட காலமாக இருந்து வந்தது. அதாவது  உபாத்தியாயரிடம் வாழ்வாதாரம் பெற்றுப் படித்தல். கல்விக்கு ஈழத்தமிழர் அதிக முக்கியத்துவம் கொடுத்தமையையே எல்லா இடங்களிலும் காண முடிகிறது.
பள்ளிக் கூடங்கள் , மிசனறிப் பாட சாலைகள், கலைக் கூடங்கள் போன்றன கல்வியை வழங்க வல்லனவாக இருந்தன. பல்கலைக் கழகங்கள் தற்போது கல்வியின் ஆதிகத்தை ஈழத் தமிழரிடையே பெரும் மரபாக்கி விட்டிருக்கிறது.

ஏடு , ஓலைச்சுவடிகள் கல்வெட்டுக்கள் , காகிதங்கள் தொடக்கம் மின் நூல் வரைக்குமான பாவனை மரபில் மாற்றத்தைக் கொணர்ந்திருக்கிறது. கேட்டுப் படித்தல், விளங்கிப் படித்தல், கற்பித்துப் படித்தல் தற்போது தேடித் படித்தல் எனும் செய் முறையினை கல்வி கொண்டு வந்திருக்கிறது.




 
ஆன்மீகம் /சமய நம்பிக்கைகள் / திருவிழாக்கள்

பண்பாடு மற்றும் மரபு சார்  விடயங்களில் தவிர்க்க தவிர்க்க  முடியாதைககளாக சமய நம்பிக்கைகள் வழிபாடுகள் திருவிழாக்கள் போன்றவை அமைகின்றன. தெய்வநம்பிக்கைகள் என்பதில் பிரதான தெய்வங்கள் வழிபாடு   தெய்வங்கள் குறித்த வழிபாடு இரு பண்பாடுகள் இருக்கினறன. இவற்றுள்நாட்டார்  தெய்வ வழிபாடுகளே ஆதியான மரபுகள் என்பது அறிஞர்களின்  துணிபாக உள்ளது. ஆயினும் ஈழத்தமிழர்கள் மத்தியில் இவ்விரு வழிபாடுகளும் மரபானதாகவும் செல்வாக்கு செலுத்துவனவாகவு ம் இருக்கினறன. முருகன் மற்றும் சிவன் போன்ற சாந்த மூர்த்தங்களின் வழிபாடுகள் நிலைநிறுத்தப்பட்ட மரபாக விளங்கி வருகின்றன. ஆயினும் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தின் நெருக்கடிகளும் கணவன்மார் ; பிள்ளைகளை இழந்த பெண்களின் நம்பிக்கைள் இந்த சாந்த மூர்த்தங்களில் இல்லாமல் காளி துர்க்கை போன்ற அகோர கடவு ள்களின் மீது அதிகளவு  ஏற்பட்டுள்ளதை அண்மைக்கால ஆய்வு கள் எடுத்துக்காட்டியூள்ளன.[13] அதேவேளை நாட்டார் தெய்வவழிபாடு பெருந்தெய்வ வழிபாடுகளாக மாற்றமடையூம் மேனிலைச் செயற்பாடுகளும் அதிகரித்துள்ளன.

தமிழ் சமூகத்தின் சமயமரபில் துறவிகள் முனிவர்கள் ,சித்தர்களை போன்றவர்களை இறைவழிபாட்டின் ஒருபகுதியாக வழிபடும் மரபு பேணப்பட்டு கவருகிறது. தமிழ் சமூகத்தினுள் வந்த கிருஸ்தவ சமயம் கூட வழிவழியாக இறைவனிடம் கொண்டு தமது கோரிக்கைகளை கொண்டு செல்லக்கூடிய இடையீட்டாக  தேவை ஏற்பட்டது. இதன் காரணமாகவே சமயத் தொண்டு புரிந்த சவேரியார, அந்தோனியார்  போன்றவார் களை புனிதராக்கி அவார்களை வழிபடும் போக்கையும் அனுமதித்தது.[14]
 
துறவிகள்இ புனிதார்கள்  மீதான வழிபாடுகள் நம்பிக்கைள் இறைவழிபாட்டின் ஒரு பகுதியாக இருந்தனவே அல்லாமல் அவை இறையாக இறைவனுக்கு பதிலானவையாக இருக்கவில்லை. ஆயினும் அதிகரித்த வாழ்க்கை நெnருக்கடிகளும் பணிச்சுமைகளும் தந்த நெருக்கத்தின் காரணமாக தியானம் மற்றும் மனஒழுங்கு சுவாசப்பயிற்சிகளின் மீது சார்ந்த ஆறுதலடையு ம் போக்கு அதிகரித்து அப்பயிற்சிகளை வழங்குவோரை கடவுளாக வழிபடும் போக்கு கணிசமான அளவு  ஏற்பட்டுள்ளது. மிகவும் திட்டமிட்டு பல்வேறு ஆதாயங்களக்காக ஊக்குவிக்கப்படும் இப்பழக்கம் இந்தியாவில் தொடங்கி ஈழத்திலும் கணிசமான செல்வாக்கு செலுத்துகிறது. அந்தவகையில் அம்மா பகவான் , சாய் பாபா மற்றும் ஸ்ரீ ரவிசங்கர் ; வழிபாடுகள் ஈழத்தமிழரிடையே கணிசமான செல்வாக்கு பெற்றவையாக மாறிவருகின்றன.

இவற்றிக்கு புறம்பாக சபரிமலைக்கு மாலைபோடும் ஐயப்பன் விரதமும் சபரிமலைக்குச் செல்லுதலும் இப்போது பரவலாக வளரத்தொடங்கியுள்ளன.

திருவிழாக்களைப் பொறுத்தளவில் அவை மாற்றங்களு;ககு உள்ளாவதற்கான வாய்ப்புக்கள்  எமது மரபில் இல்லை. இன்ன மாதங்களில் இவ்வாறான சடங்குகள் நடைபெறுவெண்டும் என்பதில் மாறுதல்கள் நடைபெறவது இல்லை. இடம்பெற அனுமதிக்க விரும்பினாலும் மாற்றம் மிகமிக அரிது. திருவிழாக்களில் சினிமா இசைக்கச்சேரிகள் மற்றும் திரைபடங்கள் திரையிடப்படுவதும் மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்சார மணிகள் மற்றும் கருவிகள் பாவனையை மாற்றங்களாக கொள்ளலாம்.

தீட்டு மற்றும் துடக்கு

மரபான விடயங்களில் மிகவூம் வலிமையானது விலக்கு அல்லது துடக்கு தொடர்பான நம்பிக்கைகளும் நடைமுறைகளும். நகரமயமாக்கல் மற்றும் அதனை ஒட்டிய வாழ்விட மாற்றங்களும் மரபாகக் கடைபிடித்து வந்த நடைமுறைகள் மற்றம் நம்பிக்கைளில் மாற்றங்களை ஏற்படுத்தியூள்ளன.

மரணவீடு குழந்தைப்பிறப்பு மற்றும் பூப்படைதல் என்பதை துடக்கான விடங்களாகவே மரபாக நம்பப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இந்த வீடுகளுக்கு சென்றவார்  குளித்தபின்பே வீட்டீனுள் நுழைதல் கட்டாயமானதாக இருந்தது. ஆனால் உள்ளக குளியல்  அறைகள் கொண்ட வீடுகளும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இந்த வழக்கத்தை பின்பற்றுவது நடைமுறையில் சாத்தியமற்றதாக ஆகிவிட்டதனால் குளித்த பின்பு வீட்டினுள் செல்லுதல் என்ற மரபில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனதவிர துடக்கான வீடுகளுக்கு சென்று விட்டு, அலுவ லகத்திற்கு சென்று பணிபுரிந்துவிட்டு, தமது தேவைகளக்கான இடங்களுக்கு சென்று விட்டு மாலையில் உள்ளகக்ககுளியள் அறைகளுக்கு சென்ற வழமை போல் குளிப்பது அதிகரித்துள்ளது.

பெண்களின் மாதவிடாய் காலம் தீட்டானதாகவும் விலக்கானதாகவும் கருதப்பட்டு வந்தது. அக்காலங்களில் அப்பெண்கள்  தனிமைப்படுத்தல் கட்டாயமானதாக இருந்தது. உலகமயமாக்கலில் உழைக்கும் வர்க்கமாக பெண்களின் பங்களிப்பு தவிர்க்கமுடியாமல் போவதும் ஆணாதிக்க சிந்தனைக்கு எதிராக வளர்ந்துள்ள அறிவும் நவீன பொருட்களின் பாவனைகளும் இவ்விடயத்தில் பெருமளவு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளன.
 
மரண வீடுகள் தற்போது இழப்பு வீடுகளாக கருதப்படுகின்றனவே அன்றி துடக்குவீடுகளாக அல்ல எள்பதையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியூள்ளது.

 தொழில்கள்
இறுக்கமான சாதிய சமூகமான எமது சமூகத்தில் தொழில்கள் சாதிரீதியாகப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட சாதிசமூகத்தை சேர்ந்தவர்களே  மேற்கொண்டு வரவேண்டும் என்பதை மரபாக்கி இருந்தது. சலவைத்தொழில் சிகை அலங்கரிப்புத் தொழில் நகைவேலை ,விவசாயம் என்பன அவற்றள் சில. இவற்றின் உற்பத்திஇ சந்தைப்படுத்தல் மற்றும் உபகரணங்கள் தொடர்பில்  மாற்றங்கள் நடந்தள்ளன. நவீன உபகரணங்களின் வருகையூம் நகரமயமாக்கலும் சலவைத்தொழிலை பெருமளவு  நீக்கியது. மேலும் நவீன சமுதாய முறையில் கூட சாதிய அமைப்பு மரபு ரீதியான காலம் தொட்டு பேணப்பட்டு வருகின்றமையும் ஈழத்தமிழரிடையே  அது தொடர்பான ஒடுக்குமுறைகளில் மாற்றங்கள் பரவலாக ஏற்படாததும் குறிப்பிடத்தக்கது.

 நவீன அழகுக் கலை நிலையம்

சிகை அலங்கரிப்புத் தொழில் குறித்த சாதிக்குரியவார்கள் மட்டுமே மேற்கொள்ளவேண்டிய தொழிலாக இருந்து வந்தது. சிகை அலங்கரிப்பு தொழில் நிலையம் எனும் போது இந்நிலையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் சிகைஅலங்கரிப்பையு ம் உள்ளடக்கிய நவீன அழகுக்கலை தொழிலாக தற்போது இது எல்லா வகுப்பினருக்கும் மேற்கொள்ளும் தொழிலாக மாற்றமடைந்து வருகின்றதுடன் சாதி கட்டுக்களுக்கு வெளியே  அத்தொழிலை கொண்டுவந்துள்ளது. அழகுக்கலை ஒரு கற்கை நெறியாக மாற்றப்பெற்றமையானது அத்தொழிலின் சாதி கடந்த நிலையை இன்னும் வலுவாக்கியூள்ளது.

அழகுக்கலையாக மாற்றமடைந்த சிகைஅலங்கரிப்புத் தொழில் மரபு ரிதியான ஆண்களுக்குரியதாக இருந்த இத்தொழிலில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. தற்போது அழகுக்லை நிலையங்கள் பல பெண்களால் இயக்கப்டுகின்றது. நவீக கருவிகளின் பாவனை இதை மேலும் வளர்ப்பதில் செல்வாக்குச் செலுத்துகிறது. இது மரபில் ஏற்பட்ட பெரிய மாற்றங்களில் ஒன்று.

நகை தயாரிப்பு
ஆபரணங்களில் தங்கம் வெள்ளி, செப்பு முதலியன மரபு ரீதியாக அணியப்பட்டன அவற்றின் கேள்வி அதிகமாக தற்போது ஈழத்தமிழரிடையே காணப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் சிந்தெடிக் ஆபரணங்களும் தற்போதைய மரபாக உள்ளன
சிகை அலங்கரிப்பு போலவே நகை தயாரிப்பும் சாதிக்குரிய தொழிலாக இந்தாலும் தற்போது பல்கலை கழகங்களில் நுண்கலைத்துறையில் நகைவடிவமைப்பும் ஒரு பாடமாக உள்ளது. தமது ஆய்வுக்கு நகைவடிவமைப்புக்களை தெரிவு செய்த பெண்கள் சிலர் பிரபல நகைக்கடைகளில் நகை வடிவமைப்பளாராகவும் தொழில் புரிகின்றனர்.  நகை தயாரிப்பு மற்றும் அலங்கரிப்பு வேலைகளில் நவீன இயந்திரங்களின் பாவனையையும் மரபுமாற்றமாகச் சுட்டமுடியூம்.

விவசாயம்
விவசாயத்தைப் பொறுத்தவரை மரபான எமது அறிவூகளும் மரபுகளும் என்றோ காணாமல்ப் போகத்தொடங்கின. அவை இன்று உச்சகட்டததை அடையத்தொடங்குகின்றன. பூச்சிக் கொல்லிகள், களைக்கொல்லிகளின் பாவனை காலத்தால் சிறிது முந்திய மாற்றம் என்றால் மரபணு மாற்றப் பட்ட விதைகளின் பாவனை அண்மைய மாற்றமாக இருக்கின்றது. இதனால் மறுஉற்பத்திக்கான விதைகளின் உரிமையு ம் மரபாக வந்த அந்த அறிவு ம் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாமல் தடைப்படுகிறது. இது ஒருவகையில் மரபின் அழிவே.
இயந்திரங்களின் பாவனை மரபில் ஏற்பட்ட மாற்றம் என்றாலும் அன்மையில் விவசாயத்pல் நுழைந்த சுனாமி எனப்படும் அறுவடை இயந்திரந்தின் பாவனை விவசாயக்கூலிகள் என்ற உழைக்கும் படையின் ஜீவனோபாயத்தில் கடுமையான வீழச்சியை ஏற்படுத்தியூள்ளதுடன் அந்த உழைக்கும் படையை மேலும் வறுமைக்குள் தள்ளி உள்ளமையும் முக்கிய மாற்றமாகும்.

நெல்லு ,புகையிலை, வாழை போன்றவற்றின் பயிர்ச்செய்கை அதிகமாக இருந்தது. தற்போது, உருளைக்கிழங்கு, முட்டைக் கோசு ,கோவா முள்ளங்கி போன்ற பயிர்களின் விவசாயம்  வாழ்வாதாரமாக உள்ளது.

தொழிற்பாடல்கள்

 நவின இயந்திரங்களின் பாவனைகள் மரபாக இரந்தவந்த பாடல்களை இல்லாமல் ஆக்கியூள்ளது. நீர் இறைக்கும் இயந்திரத்தின் வருகையூடன் ஏற்றப்பாடல்கள் மறைந்தன. சுனாமி எனப்படும் அறுவடை இயந்திரந்திரத்தின் வருகையடன் சூட்டுப்பாடல்களும் பொலிபாடல்களும் மறைந்து போயின.
நவீன பைபர்  இயந்திரப்படகுகளின் வருகையூடன் மீனவர் களின்ஏலேலோபாடல்கள் மறைந்து போனதையும் மரபுமறைவாக் கொள்ளலாம்.

தொடர்பாடல்

தொடர்பாடல் என்பதும் ஒரு சமுகம் எந்த அளவில் பேணப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கான  முக்கிய கூறாகும். கடிதங்கள், தூதுகள் ஒற்றுக்கள் போன்றன மரபாக இருந்தது. கடிதங்கள் ஈழத் தமிழர் வாழ்வில் மிகப் பெரும் தொடர்பாடல் முறைமையாகும்.

இடப்பெயர்வுகள் முற்றுகைகளின்  பின் தொலை பேசியதின் பாவனை அதிகமான தேவையாகியது. பின் மின் அஞ்சல் சேவைகள் போன்றன. தொலை பேசிப் பாவனை ஈழத் தமிழரிடையே மிகப் பரவலான தொடர்பாடல் மரபாகிறது.
அவ்வாறே செய்தி ஊடகங்கலில் பத்திரிகை மற்றும் வானொலிக்கு அதிக பங்கு இருக்கிறது. தொலைகாட்சி மற்றும் செய்மதி ஊடகங்களும் யுத்த சூழ்நிலைகளுக்குப் பின் ஈழத்தமிழ் மக்களிடையே தொடர்பாடல் முறைமையினை மாற்றின.

விளையாட்டுக்கள்.
கிளித்தட்டு, கிட்டிப்புள், பம்பரம், கெந்தல், ஒளிஞ்சு பிடித்தல், தாயம் , கொழுத்தாடு பிடித்தல், ஊஞ்சல், கம்பு , சிலம்பு, களி போன்றன மரபு விளையாட்டுக்களாக ஈழத்தில் இருந்தன. தற்போது கிரிக்கட் , உதைப்பந்தாட்டம், சைக்கிளோட்டம் , கணணி விளையாட்டுக்கள் மரபாகக் மாறிக்கொண்டிருக்கின்றன .

மருத்துவம்.
இலங்கை இயற்கை வளம் கொண்ட நாடு என்பதில் ஐயமேதுமில்லை. இயற்கை  வளங்களான மூலிகைகளை மையப்படுத்தியே மருத்துவம் இருந்தது. ஐந்தாம் மிகுந்து  காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மருத்துவ ஓடம், மருத்துவ நாள்கள் தொடர்பாக ஈழத்தில் மருத்துவம் சிறப்பாக தொன்று தொட்டு இருந்தமை கண்கூடு. ஈழத் தமிழரிடையே ஆயுர்வேத ஔதங்கள்  மருத்துவ மரபாக இருந்து வந்தன. ஆங்கிலேய மருத்துவத்தின் பயன்பாட்டின் பின் அதற்கென  தனித்துவமான மரபு ஏற்பட்டிருக்கிறது. சுகாதாரம் தொடர்பாக புதிய விழுமியங்கள் ஏற்படுத்தப்படுகின்றன ஏற்படுத்தப்படுகின்றன. இயற்கை  மருத்துவங்களை விட, உடட்பயிற்சி போன்ற செயற்கைக் கட்டுப்பாடுகள் மரபாகக் கொள்ளப்படுகிறது. தனி நபர் சுகாதாரம் வைத்திய சாலை மூலமாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.

அவ்வாறே சட்டம் ,அரசாங்கம் நீதி போன்றவையும் மரபான வழி முறைகளில் இருந்து, பொதுக் கூடல் கிராமத் தலைவர், சன சமுக நிலையங்கள், போலிஸ் பிரிவு இவற்றில் இருந்து குடும்ப நல நீதிமன்றம் வரைக்குமான மரபு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.


போர்.
போர் ஈழத்தமிழர் வாழ்வில் மறுக்க முடியாத இன மாற்றம். ஆகவே அதன் மரபு மிக முக்கியமானது. இனக்குழுமங்கள் சாதியக் குழுமங்களுக்கிடையேயான போர்கள் மரபாக இருந்து வந்தன. சாதிச் சண்டைகள் எல்லைச் சண்டைகள், காணித் தகராறுகள் திருமண உறவுகள் பற்றிய தகராறுகள் போன்றனவையே அதிகம். உடட்பலத்தையும் கத்தி கோடரி, கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தினார்கள் . தற்போதைய போரிற்கு துவக்குகள் இரசாயன, உயிரியல் ஆயுதங்களை மரபாக பயன்படுத்துகிறார்கள் ஈழத் தமிழர்கள்.




அடிக்குறிப்புக்கள்
13) மேலும் விபரங்கட்கு பார்க்க  திருச்சந்திரன்.செல்வி,இலங்கை இந்து சமயத்தில் நிலவும்  ஆண்தலைமைத்துவ சிந்தனைப் போக்குகள்,பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், கொழும்பு,2011.
14)   
சிவத்தம்பி.கா, தமிழ்ப் பண்பாட்டில் கிறிஸ்த்தவம் (கட்டு), தமிழும் கிறிஸ்தவப் பண்பாடும்,சந்திரகாந்தன்.ஏ.ஜே.வி (தொகு.ஆ), கிறிஸ்த்தவ மன்றம், யாழ்.பல்கலைக்கழகம்,திருநெல்வேலி,1993.



No comments:

Post a Comment